Header Ads



22 ஆம் இலங்கை வருகிறார் இம்ரான் கான்


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக அவர் இருப்பார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு இம்ரான் கானின் திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.

யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும். கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி 

2 comments:

  1. will he talk about burial issue of muslims.

    ReplyDelete
  2. Pakistan is Sure to support Sri Lanka at the UNHCR and Imran Khan is most likely to Confirm that Support during his visit. He is also expected to promise to canvass the support of Muslim Countries for Sri Lanka.

    But the million dollar question for the Sri Lankan Muslim Community as a whole is whether he will raise the question of the Cremation of Janaza with the Powers that be during his visit. He will be in a Strong Position to do so and let's hope he will do the needful.

    ReplyDelete

Powered by Blogger.