Header Ads



2025 இல் மற்றுமொரு ராஜபக்ஷ போட்டியிடுவார் - ஞானசாரர்


-Tamil m -

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணையை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் போது, அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும் இந்த அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதிகள் இருவருக்குமிடையில் இரகசிய சந்திப்புகள் இடம்பெற்றதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதெனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இது தொடர்பில் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ எதுவும் தெரியாதென்றும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இந்த விசாரணை ஆணைக்குழுவில் நானும் சாட்சியமளித்தேன். வில்பத்து காட்டை அழித்தமை குறித்துப் கதைத்த போது, அதன் பின்னணியில் இருந்த பிரபல அரசியல்வாதியின் பெயரே எனக்கு நினைவுக்கு வந்தது. அவரது பெயரை அறிவித்திருந்தால், என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பர்' என்றார் 

பொதுபலசேனா அமைப்பு அல்லது எமது செயற்பாடுகள் குறித்து ஆராயவோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவில்லை. இந்த ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து ஆராயவே நியமிக்கப்பட்டது என்றார். 

ஆனாலும், இந்த அறிக்கையில் 90 சதவீதமான பரிந்துரைகள் எங்களுக்கு எதிரான காரணங்களை அடிப்படையாக வைத்தே முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், எமக்குத் தெரிந்த வரையில் 2025இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார். மற்றுமொரு ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றார். 

'அரசாங்கத்துக்குள் மற்றுமோர் அரசாங்கம் இருப்பதாலேயே, இந்த அரசாங்கத்தால் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை' என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. எல்லா வன்முறை களுக்கும் காரணமான நீ உண்மையிலேயே வன்முறை veerandaa

    ReplyDelete
  2. Government should take necessary action to this row agent soon. Other than that this shit will destroy this motherland

    ReplyDelete
  3. அவர் மென்போக்காளராக இருப்பார். நிச்சயமாக தேரர் ஒரு இராஜதந்திரிதான்.

    ReplyDelete

Powered by Blogger.