இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கடந்த 16 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அத்துடன் கொழும்பு - 8 பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் கொவிட்19 தொற்றுறுதியாகி அநுராதபுரம் - மெத்சிறி செவன சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி மரணித்தார்.
மீகொடை பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மரணித்தார்.
அதேநேரம் ரிதிமலியத்தை பகுதியை சேர்ந்த 20 வயதான யுவதி ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.
தெகட்டன பிரதேசத்தை 52 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் மரணித்தார்.
கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்தார்.
வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மரணித்தார்.
வத்தளை பகுதியை சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தார்.
0 கருத்துரைகள்:
Post a comment