Header Ads



பருவமடைந்த பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு


முஸ்லிம் பெண்கள் பருவமடைந்த பிறகு 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்துகொள்ள உரிமை இருப்பதாக பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் தனிநபர் சட்டங்களின் கீழ், பருவமடைந்த ஒரு பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய திருமணம் தொடர்பான இலக்கியங்கள் மற்றும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பஞ்சாபை சேர்ந்த தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்தபோது நீதிபதி அல்கா சரின் இந்த உத்தரவை பிறப்பித்தார். பஞ்சாபை சேர்ந்த 36 வயது ஆணும் 17 வயது பெண்ணும் கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் உறவுக்கு உறவினரிடம் இருந்து ஆபத்து இருப்பதால் தங்கள் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு வேண்டுமென நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர். இஸ்லாமிய சட்டங்களின் கீழ், பருவமடைதலும், வயதுக்கு வருதலும் ஒன்றென கருதப்படுவதாகவும், 15 வயதை தொட்டுவிட்டாலே வயதுக்கு வந்தவராக கருதப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வயதுக்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் திருமணம் செய்துகொள்ள உரிமை இருப்பதாக தம்பதியினர் சார்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இஸ்லாமிய பெண் இஸ்லாமிய தனிநபர் சட்டங்களை கடைப்பிடிப்பதாக கூறினார்.

No comments

Powered by Blogger.