Header Ads



’கூறியப்படி 1,000 ரூபாயை பெற்றுக்கொடுத்து விட்டோம்’ - இ.தொ.கா.

சம்பள நிர்ணயச் சபையில், இன்று (8) நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது என்றும் இ.தொ.கா கூறியதை போலவே, ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுத்து விட்டதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சம்பள நிர்ணயச் சபையில் இன்று இடம்பெற்றப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனமானது, 565 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், தொழிற்சங்கங்கள் ரீதியில் அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயும் மேலதிகமாக 100 ரூபாயும் முன்வைக்கப்பட்டது.

'இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 1,000 ரூபாய் வழங்க வேண்டுமென 11 வாக்குகளும் 565 ரூபாயை வழங்க வேண்டும் என   8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இறுதியில் 900 ரூபாய் அடிப்படைச் சம்பளமும் 100 ரூபாயை  மேலதிகமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

'இன்னும் இரண்டு வாரங்களில் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி வெளியிடப்பட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Ayyo Ayyo... ivanugala enga poi veikka... Ipdi evanukkum 1000 illa 3000 kudukkalaame!!!... ade..1000 kuduttu daily vela kuduttu earlya iruntha ella vasathigalum kudukka mudiyumada....kevalam kettavanugale...

    ReplyDelete

Powered by Blogger.