January 28, 2021

உடல்களை அடக்க வேண்டுமென who குறிப்பிடுமாயின், விமானத்தில் கொண்டுசென்று அங்கு புதைக்கலாம் - மேர்வின்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை, பேரவை, ஐக்கிய நாடுகள் சபை ஆகிய சர்வதேச அமைப்புக்களின் தேவைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவ்வாறே செயற்படுவார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளக மட்டத்திலான தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும்..

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் உடல்களை அங்குகொண்டு சென்று புதைத்துக் கொள்ளலாம் இங்கு முடியாது. சுகாதார தரப்பினரது  தீர்மானங்களுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுவது கட்டாயமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்கு  மதிப்பளியுங்கள். தேசிய வளத்தை பாதுகாக்க அனைத்து இன மகக்ளும் ஒன்றினைய வேண்டும்.நாட்டுக்காக வீதிக்கிறங்கி போராடவும் தயாராக உள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என  உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுவார்களாயின் இறப்பவர்களின் உடல்களை விமானத்தின் ஊடாக கொண்டு சென்று அங்கு புதைத்துக் கொள்ளலாம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மநாயக்க தேரர்களின் கருத்துக்கு மதிப்பளித்து சுயாதீனமாக செயற்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படவில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் செயற்படமாட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய வளங்களை விற்கவில்லை.ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்மை தவறு தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்போது அதனை எதிர்க்கவில்லை.பொதுஜன பெரமுன கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்ட வேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாக்க முறையாகசெயற்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி பலம் பெற்ற கட்சியாக எழுச்சிப்பெறும்.தற்போது கட்சியில் தவறான நோக்கங்களை கொண்டவர்கள் உள்ளார்கள் கட்சி தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சியை  கைப்பற்றும். எம்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே செயற்படுவேன் என்றார்.


நன்றி வீரகேசரி 

10 கருத்துரைகள்:

Ivaru oru...!! ithula ivaruda news vera.... thoooo kallappayaluga

கொள்கையே இல்லாத கிழட்டு கோமாளி. நாளை ஜனாதிபதியையும், பிரதமரையும் தூற்றுவான். சாகப்போற வயதில் அரசியலிலிருந்தால் இதுதான் நிலைமை

manithargalai maratthil katti vaittu thanditta maahaa paaavi ivan...ivanda poi manithaapamaanam ethirpaarkkalaama????

People KNOW enough about you Not to take you seriously. You can keep talking all the Crap you want. The UNP is the Ideal Party for a Loser like you. Like you, it has also NO future.

யா அல்லாஹ்இ நீயே சகலதையும் அறிந்தவன். என்ன நடக்கும். என்ன நடக்காது என்பதனை நீயே நன்கு அறிவாய். மக்களை அவரவரது தரங்களுக்கு ஏற்ப எவ்வாறு கையாள வேண்டுமென்பதனை நீ ஒருவனே அறிவாய். என்னையும் படைத்து இந்த அகிலத்தாரையும் அதுபோல் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் நீயே படைத்து அவற்றை இரட்சிக்கவும் செய்கின்றாய். ஏன் சாத்தானையும் நீயே படைத்துள்ளாய். நீயே மேர்வினையும் படைத்துள்ளாய். கம்மன்பில மற்றும் விமல் போன்றவரகளையும் நீயே படைத்துள்ளாய். சகலரையும் நேரம் வரும்போது நீயே அழிக்கப் போகின்றாய். யார் யாருக்கு என்னென்ன வெகுமதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனையும் அறிந்தவன் நீ ஒருவனே. யார் யாருக்கு என்னென்ன வெகுமதிகளை வைத்துள்ளாய் என்பதனை மிகக் கெட்டவரகளாகிய எங்களுக்குக் காட்டிவிட்டால் நாங்களும் எங்களைத் திருத்தி உன்னுடைய அருளைப் பெற ஏதுவாக இருக்குமே யா அல்லாஹ். யா அல்லாஹ் கெட்டவரகளுல் ஒருவனாக எங்களை ஆக்கிவிடாதே.

அரசியலில் திக்கு தெரியாமல் தடுமாறி எங்கே போவது எங்கே வருவது என்று தெரியாது தடுமாறுவது தெளிவாக தெரிகிறது.
take rest sir.
everything will be ok

இரண்டு கட்சியிலும் காலை வைத்துக் கொண்டு ஆப்பிலுக்க திட்டம் இது போன்ற அரசியல் வாதிகள் இறுதியில் மண்ணைக்கவ்வி மாட்டை இழுக்க வேண்டியநிலையில் தான் இன்று இருக்கின்றார்கள்.

இரண்டு கட்சியிலும் காலை வைத்துக் கொண்டு ஆப்பிலுக்க திட்டம் இது போன்ற அரசியல் வாதிகள் இறுதியில் மண்ணைக்கவ்வி மாட்டை இழுக்க வேண்டியநிலையில் தான் இன்று இருக்கின்றார்கள்.

இந்த நாடு குரங்குகளின் கையில் பூ மாழை கொடுத்து போல்.

இந்த நாடு குரங்குகளின் கையில் பூ மாழை கொடுத்தது போல்.

Post a comment