Header Ads



ஈஸ்டர் பிரதான சந்தேக நபரான சாரா, எவ்வாறு இலங்கையிலுருந்து இந்தியாவிற்கு சென்றார்..? அப்புஹாமி Mp கேள்வி


இன்று (23) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்த கருத்துக்கள்.

பாராளுமன்றத்திலும், அரசாங்கத்திலும் புதிய ஒர் வழிமுறை உருவாகிக் கொண்டு பேகிறது.அதுதான் சகல பிரச்சிணைகளையும் ஜனாதிபதியில் பொறுப்புச் சாட்டுவது, ஆனால் இந்

அரசாங்கத்தை ஆளும் ராஜபக்‌ஷ முழு குடும்பமும் பெறுப்பெடுக்க வேண்டும்,ராஜபக்‌ஷர்கள் தான் அதிக அமைச்சர்களாகி இருக்கின்றனர்,பாராளுமன்ற உறுப்பினர்களாக, நிறுவன தலைவர்களாக,தூதுவர்களாக என்று பெறும்பாலனவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.ஆகவே அரசாங்கத்தின் பிரச்சிணைகளை குடும்பம் கூட்டாகப் பொறுப்பெடுக்க வேண்டும்.அரசாங்கத்தை யாரோ இயக்குகிறார்கள்,பிசிஆர் பரிசோதனை குறைந்துள்ளது,உக்ரைனியர்கள் வருகை தருகிறார்கள்,வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றவர்களை மீள அழைத்து வருவதில் ஏதோ மாபியா நடக்கிறது இதை யார் தான் செய்கிறார்களோ என்று தெரியாதது போல் நடிக்க வேண்டாம்.

நாட்டின் ஒரு இடத்துக்கூட வெளிநாட்டவர்களுக்கு விற்க மாட்டோம், நல்லாட்சி அரசாங்கத்தில் விற்ற இடங்களை மீளக் கைப்பற்றுவோம், எந்த நாட்டிற்கும் தலை சாய்க்க மாட்டோம் என்றெல்லாம் தேர்தல் காலங்களில் கூறினார்கள்.69 இலட்சம் மக்களை இவ்வாறான கதைகளைக் கூறி ஏமாற்றி விட்டனர். முதுகெலும்பு இருந்தால் நீங்கள் கூறியது போன்று ஹம்பந்தோட்டை துறை முகத்தை மீளக் கைப்பற்றுங்கள் என்று சவால் விடுகிறேன்.கிழக்கு முனையத்தை இலங்கை முதலீட்டாளர்களுக்கு முடியுமானால் வழங்குங்கள் பார்ப்போம் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.கிழக்கு முனையம் விடயத்தில் இன்று சகல தரப்பும் ஒன்றித்து எதிர்பை வெளிப்படுத்துகின்றனர்.குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த பிக்குகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இன்று வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.துறை முக ஊழியர் சங்கம் முதுகெலும்புள்ள ஊழியர் சங்கமாகும். நாட்டிற்காக முன்னிற்கின்றனர்.அவர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்.

இன்று பிக்குகள் மக்களின் பிரச்சிணைகளைப் பற்றி பேசும் போது ஓர் அச்சத்துடனயே பேசுகின்றனர். தமது உயிருக்கு தமது இருப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை இன்று அவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரனைகளில் என்ன முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது.ஈடுபட்டவர்களுக்கு தன்டனை எங்கே? பிரதான சந்தேக நபரான சாரா எவ்வாறு இலங்கையிலுருந்து இந்தியாவிற்கு சென்றார்? இலங்கையின் புலனாய்வுப் பிரிவு என்ன செய்து கொண்டிருந்தது.நல்லாட்சி அரசாங்கத்தில் தான் புலனாய்வுப் பிரிவு பலவீனமாக இருந்தது என்றால், தற்போது உங்கள் ஆட்சியில் பலமாகவுள்ள புலனாய்வுப் பிரிவு கண்டு பிடிக்க வேண்டுமல்லவா? சாரா எவ்வாறு இந்தியாவிற்குப் போனார், யார் அனுப்பி வைத்தது சகலதையும் கண்டு பிடியுங்கள்.இதை உன்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.உயிர்த் ஞாயிறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குப் பெற்ற அரசாங்கம் சாராவை அழைத்து வாருங்கள்.அதன்பாலான பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உண்டு.

இன்று அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை சிறையில் அடைக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அவர்களை அச்சுறுத்தும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

மக்கள் பல்வேறு வாழ்வாதார பிரச்சிணைகள் மற்றும் முறையான வருவாய் இன்மையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரேனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்காமல் இரத்னபுரவில் மெனிக் கோபுரம் நிர்மானிக்க அடிக்கல் நட்டுகின்றனர்.மக்களை பானியின் பக்கம் திசை திருப்பி விட்டு பெறுப்பற்று செயற்படுகின்றனர்.மக்களை வாழ வைக்கும் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

அரசாங்கம் பாரிய ஊழல் மேசடிகளில் ஈடுபட்ட வன்னமுள்ளனர். நாடு ஒர் அராஜக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.தயவு செய்து நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்று தயவு செய்து கேட்டுக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.