January 14, 2021

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது - ஹர்ஷன Mp


இன்று(14) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று தைப்பொங்கலைக் கொண்டாடும் சகலருக்கும்  தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்த அவர்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக ஐனதிபதிக்கும் தொழிற் சங்க பிரதிநிதிகளுக்குமிடையே கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றது. இதில் ஐனாதிபதி கூறிய விடயங்களால் கலந்துரையாடல் பயன்ற்றது என்று ஊழியர் சங்கத்

தினர் கூறியதை கண்டோம்.

முழுமையாக வழங்குவதுமில்லை. குத்தகைக்கு வழங்குவதுமில்லை என்று கூறி,ஆனால் 49 வீத பங்கை அதனிக்கு வழங்குவதாக பின்னர் கூறுகிறார்.யாரை ஏமாற்றுகிறார். இவ்வாறு கூறுவது மக்களுக்களுக்கு புரியாது என்றா நினைத்துள்ளார்.49 வீத பங்கை எங்களுக்கு மீள பெற்றுக் கொள்ள முடியாது.என்ன விடயங்களைக் கூறி என்ன விடயங்களை பிரச்சாரம் செய்து ஆட்சியை பெற்றுக் கொண்டனர் என்று நமக்கு தெரியும். ஆனால் ஆட்சிக்கு வந்து குறுகிய நாட்களுக்குள் இத்தகைய விற்கும் படலத்தை மேற்கொள்ள உத்தேசித்து பல கட்டங்களை இன்று கடந்துள்ளனர்.ஹம்பாத்தோட்டை துறை முகத்தை நாங்கள் முழுமையாக சீனாவிற்கு வழங்கவில்லை.நாங்கள் குத்தகைக்கு தான் வழங்கினோம். துறை முகம் சார்ந்து சீனாவுடன் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கைகளை  கிழித்தெரிந்து புதிய உடன்படிக்கைகளுக்கு வருவதாக கூறியவர்கள்.இவ்வாறு பொய்யான வாக்கறுதிகளை மக்களுக்கு வழங்கி  ஏமாற்றுகின்றனர்.

ஹொரன பிரதேசத்தில் டயர் உற்பத்தி சாலையை திறப்பதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று செல்கின்றனர். அடுத்தவர்களின்  பிள்ளைகளுக்கு ஒப்பு வழங்க முற்படுகின்றனர். 290 மில்லியன் செலவில் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்தத செயற்திட்டமாகும்.இன்றைய சகல பத்திரிகைகளிலும் தாம் நிர்மானித்த ஒர் செயற்திட்டம் போல் விளம்பரம் பிரசுரித்துள்ளனர்.இன்று மக்களுக்கு பயன்பெறுகிறது.2017 ஐனவாரி 5 ஆம் திகதி அடிக்கள் நாட்டுனோம். ்அன்று பலர் எம்மை விமர்சித்தனர்.இன்று அத்தகையவரகள் திறப்பு விழாவுக்கு செல்கின்றனர்.மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

நீதி கட்டமைப்பு குறித்து மக்கள் இன்று பேசத் தொடங்கி இருக்கின்றனர். சுயாதீனமற்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் விடுதலை பெறும் நிலை இன்று  ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஒருவர் விடுதலை பெறுகிறார்.நாட்டில் ஊழல் பற்றிப் பேசிய ரன்ஞன் கைது செய்யப்படுகிறார்.அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கைதுசெய்யப்படும் நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது.சட்டப் கட்டமைப்பின் சுயாதீனம் குறித்த கேள்விகள் எழுகின்றன.

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்குங்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார்.தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கும் அதனை இறக்குமதி செய்வதற்கும் தனியார் துறைக்கும் அனுமதி கொடுங்கள்.முடியுமானவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.மிகுதி மக்களுக்கு இலவசமாக அரசாங்கம் வழங்கும் நடவடிக்கை குறித்து சித்திக்கலாம்.இலவசமாக வழங்கவுள்ள தடுப்பூசிகளை கொரோனா தடுப்பு சேவையிலுள்ள சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை முன்னிலை அதிகாரிகளுக்கு இலவசமாக கொடுக்க முன்வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று நான் சுட்டிக் காட்டுகின்றேன்.

சுற்றுலாத்துறைக்கு வாய்ப்பளிக்க முன்னர் தடுப்பூசி பெற முன்னுரிமை கொடுங்கள்.மக்களின் பாதுகாப்பும் அதனோடினைந்த வாழ்வாதரமும் முக்கியமானது.இதை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a comment