Header Ads



இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தவை


இன்று (02.01.2021) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் 

சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் உக்ரேனியர்களின் வருகை சுற்றுலா நிமித்தமா?  தனிமைப்படுத்துதல் நிமித்தமா?

முழு உலகமும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் சுற்றுலா நிமித்தம் நாட்டைப் பார்வையிடவா? அல்லது தனிமைப்படுத்தலுக்காகவா? சுற்றுலாப் பயணிகளை இலங்கை அரசாங்கம் அழைத்து வருகிறது என்று அரசாங்கத்திடம் வினவும் விதமாக கேள்வி எழுப்பினார்.சர்வதேச ரீதியாக கொரோனா பரவலில் பெருமளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உக்ரைனும் அடங்குகிறது.மில்லியன் கணக்கை எட்டும் 9 ஆவது நாடாக உக்ரைன் அடையாளப்படுத்தப்படுகிறது.

இவ்வாறன பின்னனியில் நாட்டின் பொருளாதார ரீதியான வருவாய்க்காக சுற்றுலா பயணிகளை உக்ரைனிலிருந்து இங்கு அழைத்து வருவது தறபோதைய சூழலில் உகந்த விடயம் அல்ல எனக் கூறிய அவர் சர்வதேச ரீதியாக பல நாடுகள் மீண்டும் பயணத்தடைகளை வரையறைகளுடன் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் போது நாமும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.மூன்றாம் அலை குறித்தும் புது வகையான வைரஸ் பரவல் குறித்தும் இலங்கையில் அவதானம் இருக்கத்தக்க உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகுந்த சிக்கலுக்குரிய விடயமாகும்.மறுபுறம் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளன.உக்ரைனைச் சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

விமான நிலையத்திலிருந்து உட்பிரவேசிக்க முன் முறையான பிசிஆர் பரிசோதனை உக்ரைனியர்களுக்கு மேற்க் கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் இன்று எழுகிறது.அவ்வாறு ஏற்ப்பட்டால் அவர்களுடைய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அவ்வாறு உட்படுத்தும் போது அவரகளுடைய சுற்றுலா பயண கால எல்லை முடிவடைந்து விடும்.அதனால் தான் வினவுகிறோம் அவர்களின் வருகை தனிப்படுத்தல் நோக்கமா?அல்லது உன்மையான சுற்றுலா நோக்கமா என்று.

உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவா அல்லது அரசாங்கத்துடன் இணைந்த நட்புறவு வியாபாரிகளை போஷிப்பதற்கா? பயண சீட்டு முதல் பிரயாண ஒழுங்குகள்,உள்ள போக்குவரத்து வாகனங்கள்,பார்வையிட செல்லும் இடங்கள்,தங்குமிட வசதிகள் என்று சகலதும் ஏலவே தெரிவு செய்யப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர்களின் பண புலக்கம் அரசாங்கத்தின் நெருங்கிய நண்பர்களின் வியாபார வாட்டத்திற்குள் இடம் பெற றுக் கொண்டிருக்கிறது.

இன்று தனிமைப்படுத்தல் முகாம்களில் பல குறைபாடுகள் உள்ளது என்று வெளிப்படையாகவே காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்தவே தனிமைப்படுத்தல் முறைமைகளை முறையான சுகாதார வழிமுறைகளில் மக்களுக்கு பயணளிக்கும் விதமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் தற்போது இல்லை.அவ்வாறு தேவைகள் பூர்த்தியாக்கப்பட்ட தனிமைப்படுதல் நிலையங்கள் இருக்குமானால் நோயாளிகள் ஏன் அதை விட்டு வெளியேறுகிறார்கள்? என்று அரசாங்கத்திடம் கேட்கிறோம் என்றார்.

மத்திய கொழும்பு,கொழும்பு வடக்கு குறிப்பாக கொழும்பு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சில பிரதேசங்கள் தொடர்ச்சியாக இரண்டு மாதமளவில் முடக்கப்பட்டுள்ளன.இந்த பிரச்சிணையைக் கையாளவும் தீர்வு வழங்கவும் அரசாங்கம் தேல்வியுற்றுள்ளதை தொடரான முடக்கம் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது.கொழும்பில் பிசிஆர் பரிசேதனைகளை அதிகப்படுத்துங்கள்.தொடரான முடக்கம் மூலம் அந்தப் பகுதி மக்கள் பாரிய பல பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அரசாங்கம் பெய்ல் என்று நாங்கள் மீண்டும் கூற வேண்டியதில்லை.அதை அவர்களே மீண்டும் மீண்டும் நிரூபித்த வன்னம் உள்ளனர்.தரமற்ற அடைக்கப்பட் மீன் இறக்குமதி குற்றச்சாட்டின் பிரகாரம் பதவி நீக்கப்பட்ட சதோச மற்றும் லக் சதோச நிறுவனத்தின் முன்னால் தலைவரை இந்த அரசாங்கம்,இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் புதிய தவிசாளராக நியமித்துள்ளது.இதன் பின்னனியில் பல மறைமுக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.அனைத்தும் துஷ்பிரயோகம் ரீதியானது.மீண்டும் அவர்களின் நெருங்கிய வட்டார நபர்களை இவ்வாறான பதவிகளுக்கு அமர்த்துவதன் நோக்கமும் இத்தகைய பின்னனியில் தான்.தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இத்தகைய இரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்த பின் நிற்க மாட்டோம்.

அரசாங்கம் இப்போது இரண்டு குழுக்களாகப் பிளவுபட்டுள்ளது.ஒரு முறை ஜனாதிபதி இரண்டு முறை பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்.இவருக்கும் மேலாக சரத் வீரசேகர மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்கிறார்.ஜனாதிபதியின் நிலைப்பாட்டை தான் இவர்

 வெளிப்படுத்துகிறார்.அரசியல் அநுபவமுள்ள பிரதமரின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான கருத்துக்களை அவர் முன் வைத்துள்ளார். 

அன்று திரு.பண்டாரநாயக்க அவர்கள் இன்றுள்ள அரசாங்க என்னப்பாட்டைப் போல்  1956 இல் ஆட்சிக்கு வந்தார், நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியாமல் போனது.போலியான இனவெறி மற்றும் மத வெறியை விதைத்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.இன்று மாயைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.இந்த அரசாங்கத்தின் பின்னியிலுள்ள இன மத ஆதரவுக் குழுக்களிடம் பல உள் நோக்கங்கள் உள்ளன.பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு என்ன நடந்ததே அதுவே தற்போதைய அரசாங்கத்திற்கும் நடக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

No comments

Powered by Blogger.