Header Ads



இலங்கையில் கொரோனா உடல்களை எரிப்பதை நிறுத்த உலக நாடுகள் ஒத்துழைப்பு - துருக்கி ஜனாதிபதி தடுப்பார் என நம்புகிறோம் - MCB


இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தென்னாபிhக்கா பொட்ஸ்வானா மலாவி அவுஸ்திரேலிய நியுசிலாந்து இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இந்த விடயத்தில் தங்களிற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவரம் பாதூரமானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம், ஆண்டவன் அருளிலிருந்தால் நாங்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக பாரிய பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளோம், பல நாடுகளின் தலைவர்கள், திணைக்களங்கள் வெளிவிவகார அமைச்சர்களை தொடர்பு கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும் இலங்கையின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின.; கீழ். சட்டவிரோதமானது நியாயமற்றது என அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர் எனவும் பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.

துருக்கியின் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டுள்ளோம், அவர் இலங்கையின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் கரிசனைகளை சுட்டிக்காட்டி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்;சு இலங்கை அரசாங்கத்திற்கு எழுதியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிhக்கா பொட்ஸ்வானா மலாவி அவுஸ்திரேலிய நியுசிலாந்து இந்தோனேசியா உட்பட பல நாடுகள் எங்களிற்கு ஆதரவளிக்கின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நாடுகள் அனைத்தும் எங்களிற்கு ஆதரவளிக்கின்றன ஆகவே விரைவில் இதற்கு தீர்வை காணமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த ஆபத்தான முனனுதாரணம் காலூன்றுவதை நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விடயத்தில் தான் விரும்பியபடி நடப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதித்தால் அரசியல் – இஸ்லாம் குறித்த அச்சம் போன்ற காரணங்களிற்காக ஏனைய நாடுகளும் இதே தந்திரோபாயத்தை முன்னெடுக்க கூடும் எனவும் பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.

நாங்கள் உயிரிழந்தவர்களை அவமதிக்க கூடாது கொரோனாவினால் உயிரிழந்தவர்களிற்கு எதிராக புனிதங்களை அவமதிக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் சில சமூகங்களிற்கு எதிரான உயிரியல் ஆயுதங்களாக மாறக்கூடும் என இலங்கை அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பது அர்த்தமற்றது என அவர் சாடியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் விடயத்திற்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவத்தை வழங்கவேண்டும், உலகில் மேலும் மேலும் பலர் கௌரவமான வழிமுறைகள் மூலம் இதற்கு எதிராக போராடுவார்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகாராலயங்கள் மூலம் உலகின் எந்த பகுதியிலும், அநீதியை முஸ்லீம்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற வலுவான செய்தியை தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. DONT WORRY BROTHER, GOVERMENT WILL AGREE BCOS FOR COMING JENIVA, BUT SOME MUSLIM BROKER WILL ANOUNCE THEY DONE GREAT JOB, GOVERMENT WILL GIVE THE TICKET TO FLY AND TALK WITH MUSLIM COUNTRY TO SUPPORT TO GOTHA, AGAIN SAME STORY WILL START

    ReplyDelete

Powered by Blogger.