Header Ads



IS பயங்கரவாதிகளை ஆதரித்ததாக 3 இலங்கையர்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் நடந்த இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இலங்கையர்கள் மூவர் ஐ.எஸ் குழுவில் அங்கம் வகித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களில் ஐந்து அமெரிக்கர்களும் அடங்குவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழு இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், சிரிய குழுவுக்கு எதிரான மேற்கு கூட்டணி நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர்...

முதலாவது Mohamed Naufar
இரண்டாவது emir
மூன்றாவது இலங்கையில் ஐ.எஸ்-க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சியாளர், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிக்க உதவியதாக கூறப்படும் Mohamed Anwar Mohamed Riskan மொஹமட் ஆகியோர் அடங்குகின்றனர்.
அத்துடன் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கொன்ற Ahamed Milhan Hayathu Mohamed மீதும் அமெரிக்க நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் விடுதலை பெற்றால் அமெரிக்க குற்றச்சாட்டுகளை முன்னெடுக்கும் அதே வேளையில் இலங்கைில் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதை ஆதரிப்பதாக மெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவருவதற்கான திறனைப் பற்றி அமெரிக்கா இலங்கை அதிகாரிகள் மீது நம்பிக்கையுடன் உள்ளது.

மேலும் குற்றத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முயற்சித்தால் அவர்களை தண்டிக்க நாங்கள் தயாராக நிற்கிறோம் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்துகிற என்று அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர் நிக் ஹன்னா கூறினார்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதரவு வழங்கியதாக இந்த மூவர் மீதும், இஸ்லாமிய அரசுக்கு இராணுவ பயிற்சிக்கு உதவியதாகவும் Naufar and Milhan மீது குற்றம் சாட்டப்பட்டது.

No comments

Powered by Blogger.