Header Ads



கொரோனாவிலிருந்து மீண்ட, தயாசிறியின் ஆலோசனைகள்


கொரோனா உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்களை மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப வேண்டும், அறிகுறிகளுடன் கூடிய மற்றவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட வேண்டும் என கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகள் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் தொடர்பாளர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்புவது மிகவும் செலவுமிக்க செயற்பாடாகும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை பராமரிப்பதற்கு அரசாங்கம் அதிக செலவு செய்து வருகிறது.அத்துடன் மருத்துவ ஊழியர்களின் வெற்றிடங்கள் மற்றொரு பிரச்சினையாக இருப்பதாக தயாசிறி தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி 8 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளான ராஜாங்க அமைச்சர் ,ஹிக்கடுவவில் உள்ள ஒரு விருந்தகம் ஒன்றில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள்.

அத்தகையவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்வதை விட,வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதே சிறந்தது. அது அரசாங்கத்துக்கான நிதி விரயத்தைக் குறைக்கும் என்று தயாசிறி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.