Header Ads



நல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்களுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...!


சிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி..

பைத்தியக்கார தீவிரவாதிகளின் தாக்குதல்களின் பிறகு உள்ளங்களில் ஏற்பட்ட குரோதங்களுக்கான ஒரு ஒளடதம் என்று கூற முடியும்.

முதலில் அவர் ஒதுக்கப்பட்ட , கவனங்களை ஈர்க்காத வறுமை மாணவர்களின் குரலாக இருக்கிறார்.

அத்துடன் சமையலுக்கு தான் பெண் என்ற ஆண்களின் மனநிலைக்கு எதிராக பேசுகிறார்.

திறமை மிக்க கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் , யுவதிகளுக்காக பேசுகிறார்.

பெற்றோருக்கு கூட சுமையாக இருக்க கூடாது என்று ஆசைபடுகிறார்.

மனிதன் என்ற அடிப்படையில் சர்வதேச சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

தாய் மொழியை விட சிங்கள மொழியில் , சிங்கள இலக்கியத்தில் , வரலாற்று தகவல்களில் , பொது அறிவில் உள்ள தேர்ச்சி பெரும்பான்மை மக்களையே அதிசயம் அடையச் செய்துள்ளது.

அனைத்தையும் விட தனது வாழ்வின் இலக்கை கேட்ட போது குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் , குறிப்பிட்ட துறையில் கற்று குறிப்பிட்ட பெண் அதிகாரியாக வருவேன் என்று அவர் துள்ளியமாக வரையறை செய்துள்ள விடயம் குறிப்பாக மாணவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம்.

வாழ்த்துக்கள்..!

Safras Samsudeen

4 comments:

  1. நான் நேற்று அல்லது முன்தினம் இது சம்பந்தமான ஒரு பதிவினை இட்டிருந்தேன். முஸ்லிம் இந்து கிறிஸ்தவ மக்களைவிட பௌத்த மக்கள் மிகவும் நல்லவர்கள் என்பதனை எல்லாராலும் அறியக்கூடியதாக இருக்கின்றது. "சிரச" பததிரிகைக் குழுமம்கூட தாங்கள் நினைத்திருந்தால் இப்பரிசினை தாம் விரும்பும் வேறு இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்குக் கொடுத்து இருந்திருக்கலாம். இப்படியான "ஜில்மால்" வேலை ஒன்றும் இந்தக் காலத்தில் நடைபெறாமல் இல்லை. ஆனால் இங்கு நீதிக்கும் நியாயத்திற்கும் இட்ம் வழங்கப்பட்டிருக்கின்றது. மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம். வளர்ந்துவரும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக இருந்து சகோதரத்துவத்தையும் நட்பையும் எம்மத்தியில் வளர்த்து நாட்டிற்கு நற்பிரஜைகளை உற்பத்தி செய்வதற்கு எமது பங்களிப்பினையும் வழங்குவோமாக.

    ReplyDelete
  2. We need many more shukras in all other fields too..in science; technology; arts; humanities and all other subjects... Muslim community must bring out its talent and skills .. Teachers must dedicated their life for teaching not doing business while doing teaching .
    Community leaders and parents like shukras parent should dedicate time and life for children .
    Look what our youth do in Colombo city..many of them failed GCSE...and drive three wheelers

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரி. நல்லிணக்கத்துக்கு துணிவும் திறமையும் தெளிவும் மிக அவசியம் என்பதற்கு சான்றாக அமைந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள் சுக்ரா. முஸ்லிம்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் சகல இளைஞர்களுக்கும் எதிர்காலம் மீதான புது நம்பிக்கையாக மேம்படுகிறீர்கள். மேலும் மேலும் மேன்மைகள் பெறுவீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.