Header Ads



கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவிப்பு


கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.