Header Ads



வெளிநாட்டில் நிர்க்கதியான இலங்கையர்களுக்காக குரல்கொடுத்த நாமல் - அவரின் ஐடியா நடைமுறைக்கு வருமா..?


பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிநாடுகிளல் உள்ள இலங்கை தொழிலாளர்கள் கட்டாயமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும் எனவும் அவர்களை தனிமைப்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் ஹொட்டல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள இடமளிக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதன் போது கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச,

கட்டணம் செலுத்தி தற்போது ஹொட்டல்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, அரசாங்கத்தினால், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களை இலவசமாக தனிமப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் சில ஹொட்டல்கள் தனிமைப்படுத்தலுக்காக அறவிட்ட அதிகமான கட்டணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.