Header Ads



இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்


இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Afifa Maryam first Muslim woman neurosurgeon) என்கிற வரலாற்றை படைத்திருக்கிறார்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த அஃபிஃபா மரியம்.

மரியம் தனது உருது நடுத்தரப் பள்ளியில் படிக்கும் போதே 10 ஆம் வகுப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் ஆரம்ப கால எழுச்சிமிகு இஸ்லாமிய சமூகம் கல்வியில் முக்கியத்துவம் கொடுத்தது போல நாமும் நற்கல்வியை நோக்கி நகர்வதே மீட்சியை 

தரும். இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன.

கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது.

கல்வியை நபி (ஸல்) அவர்கள் உலகக் கல்வி , மார்க்கக் கல்வியென பிரிக்கவில்லை மாறாக பயனுள்ள கல்வி பயனற்ற கல்வி எனப் பிரித்தார்கள். யா அல்லாஹ் பயனுள்ள கல்வியறிவை தா பயனற்ற கல்வியறிவை விட்டு தூரமாக்கு எனத் துஆ செய்தார்கள்.

3 comments:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அதிகமான பெற்றோர்கள் அறிவால் அடிமட்டத்திலிருக்கும் பல ஆலிம்களின் தவறான வழிகாட்டலுக்குட்பட்டுள்ளதன் காரணமாக பெண்களின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது. அது அகலும் வரை மந்த கதியில் தான் முன்னேற்றம் காணப்படும். சிரச TV ல் வெற்றி பெற்ற பெண்மணி ஒரு விடயம் சொல்லியிருந்தார் நான் முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் எனது பெற்றோர் எனக்கு முழு சுதந்திரமும் வழங்கிருக்கின்றனர் அதனால் என்னால் இவ்வெற்றியைப் பெறமுடிந்தது என்பதாக. இது எவ்வளவு ஆழமான தாற்பரியம் கொண்டது. எந்த இடத்தில் முஸ்லிம் சமூகம் சிக்கியிருக்கின்றது. இச் சிக்கல் யாரால் எப்போது சீராக்கப்பட்டு உலக நீரோட்டத்தில் இணைக்கப்படும். அதுவரை முஸ்லீம் சமூகம் தனிமைப்பட்ட சமூகமே.

    ReplyDelete

Powered by Blogger.