Header Ads



மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை, ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது


தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதால், மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை உருவாகி வருகின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது .

இச்கொரோனா வைரஸிற்கு எதிரான தந்திரோபாய அணுகுமுறை அவசியமானதாகும். அது தங்கள் நாட்டிற்கு பொருந்தும் விதத்தில் பயன்படுத்தவேண்டும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரித்து நோயாளிகளை கண்டுபிடிக்கவேண்டும், நகரங்களிற்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும். இதன் மூலம் மக்கள் மத்தியில் வைரஸ் அபாயத்தினை குறைக்கவேண்டும்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேல் மாகாணத்திலிருந்து வைரஸ் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதால், மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை உருவாகி வருகின்றது. மருத்துவமனைகள் தங்களால் இயலக்கூடிய அளவினை கடந்துவிட்டால் நாட்டின் சுகாதார அமைப்பு முறை முற்றாக வீழ்ச்சிகாணலாம்.

இதன் காரணமாக தொற்றுநோய் பிரிவும் சுகாதார அமைச்சும் ஜனாதிபதியை எச்சரிக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.