Header Ads



இலங்கை இஸ்லாமியர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக, சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் கண்டனம்


இலங்கையில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் பாரம்பரிய இஸ்லாமிய இறுதி சடங்குகளை மீறும் கட்டாய தகனங்களை சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் என்ற மனித உரிமைகள் நிறுவனம் கண்டித்துள்ளது.

இஸ்லாத்தில், தகனம் ஒரு பாவமாகவும், மனித எச்சங்களை இழிவுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் குறிப்பிட்ட வழிகாட்டுதல், உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கிறது.

எனினும் இலங்கை அரசாங்கம் 2020 மார்ச் முதல் கொரோனாவினால் இறந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்வது, எந்தவொரு பொது சுகாதார அபாயத்தையும் காட்டவில்லை.

எனவே இலங்கை அரசாங்கத்தின் கட்டாயத்தகனம், ஒருவரின் மத சுதந்திரத்திற்கான உரிமையையும், நடைமுறையில் மதத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் மறுப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.