Header Ads



கனடா - வன்கூவரில் நாளை, இலங்கை ஜனாசா எதிர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாகன ஊர்வலம்


- Zacky junaid -

     கனடா வன்கூவர் வாழ் இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களினால் இலங்கையில் ஜனாசா எதிர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் வாகன ஊர்வலமும் நடாத்துவதற்கான ஏற்பாட்டை இங்குள்ள இலங்கை முஸ்லிலிம்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

         எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி பிற்பகல் இரண்டு மணிக்கு வன்கூவர் நகர் மத்தியில் அமைந்துள்ள லைப்ரரி ஸ்கயாரில் இலங்கையில் கொரோனாவினால் இறப்பவர்களின் பூதவுடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் வாகன ஊர்வலத்தையும் நடாத்த இங்குள்ள இலங்கை முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

       இங்கு வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டு இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றனர். 

No comments

Powered by Blogger.