Header Ads



மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக்க திட்டம்..?


1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனைக் காலத்தை – நான்கு வருட மீளாய்வு அறிக்கைக்கிணங்க குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க  அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 1998 க்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தவிர்ந்த – ஏனைய கைதிகளின் தண்டனையை, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக 4 மேன்முறையீட்டு நீதிமன்றங்களை துரிதமாக ஸ்தாபிக்க சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும், மேன்முறையீடுகளை தாக்கல் செய்துள்ள கைதிகளினால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் துரிதமாக மதிப்பீடுகளை மேற்கொண்டு உசிதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.