Header Ads



இன்னொரு புதிய தொற்று, மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்க உள்ளது - எபோலா கிருமியை கண்டறிந்த மருத்துவர் தெரிவிப்பு


இன்னொரு புதிய தொற்று மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்க இருப்பதாக எபோலா கிருமியை கண்டறிந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

1976இல் எபோலா தொற்றை கண்டறிந்த மருத்துவர் Jean-Jacques Muyembe Tamfum இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மனித குலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்ள இருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆபிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் புதிய மற்றும் அபாயகரமான வைரஸ்கள் உருவாகியுள்ளன

இது மனிதகுலத்திற்கு மொத்தமாக பேரழிவை ஏற்படுத்தும்.

கொரோனா பெருந்தொற்றை விடவும் அது அபாயகரமானது, மிக விரைவில் பரவக்கூடியது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2019இன்று இறுதிப் பகுதி முதல் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெருந்திரளான உயிர்களையும் காவு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.