January 20, 2021

முல்லாக்களைக் கேவலப்படுத்தும் கல்லாதார் - சன்மார்க்க அறிஞர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயமா..?


- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -

முல்லா என்ற சொற்பதம் அல் குர்ஆனையும் ஹதீஸையும் ஏனைய சமய சட்டங்களையும் கற்று பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுத்து சன்மார்க்கத்தைப் பாதுகாக்கும், தீன் பணிபுரியும் ஆலிம்களையே அது குறிக்கும்.

இச்சொற்பதம் ஈரான், இராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிள் பயன்பாட்டில் உள்ளது.

அல்லாமா முல்லா அலீ காரி போன்ற மாமேதைகள் இப்பதம் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆலிம்களையும் கற்றோரையும் கேவலப்படுத்தும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் பெருகிவரும் இக்காலத்தில், முல்லாக்கள் என்று சொல்லின் அர்த்தமே புரியாத புத்திசாலிகள் சமயம்கற்ற சன்மார்க்க அறிஞர்களை குற்றவாலிக் கூண்டில் நிறுத்தி, சமூகத்தின் புறத்தோற்றத்தை சரி செய்யப் போகிறார்களாம்.

பாவம், உளவியாதியின் காரணமாய் உளத்தோற்றத்தை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் இப்போது புறத்தோற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய சட்டக்கலையை பிக்ஹுக் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. பிக்ஹுக் கலையின் பெறுமதி புரியாதவர்கள், புதியன புகுத்தி பழையன கழிக்க முற்பட்டுள்ளனர். 

புதியன எதில் புகுத்துவது? அல் குர்ஆனிலா? அல் ஹதீஸிலா? பிக்ஹு சட்டத்திலா? முக்காலத்துக்கும் முகம்கொடுக்கும் ஷரீஆவைக் கொண்ட சமூகம் எதனைப் புகுத்தவும் எதனைக் கழிக்கவும் முயற்சிக்கின்ற?

ஒரு புதிய பிக்ஹினை உருவாக்கி புதியன புகுத்தவா? அல்லது பழைய பிக்ஹின் மீது இருக்கும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தகர்ப்பதா இதன் அர்த்தம?

ஆலிம்கள் மீது இருக்கும் இவர்களது இறுக்கமான வரண்ட பார்வையின் காரணமாக, நல்லுபன்னியாசங்கள் கூட வரண்டவையாகவும், அவர்களை மாற்றுக் கிரகவாசிகளாகவும் 

நிறம்மாற்றிகளாகவும் வரண்ட குருட்டு விமர்சகர்களாகவும் தாலிபானிஸ கெடுபிடிக்காரர்களாகவும், துருப்பிடித்த வரட்டு அணுகுமுறையாளர்களாகவும் கினற்றுத் தவளைகளாகவும் மங்கிய புதிதிக்காரர்களாகவும் காழ்புணர்ச்சி கரையான்கள் எனவும் ஏன் மஞ்சளித்துப் போன பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று ஒட்டுமொத்த ஷரீஆவையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறியிருக்கின்றனர்.

இவர்களது மேற்சொல்லப்பட்ட நச்சுக்கருத்துக்களை விடவும் மோசமாகவா எமது ஆலிம்களும் பிக்ஹுத் துறையும் உள்ளங்களையும் உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டன?

ரஹ்மதன் லில் ஆலமீன் என்ற பார்வை இருந்திருப்பின் இப்படியான வன்மம் வெளிப்பட்டிராது.

உடைந்த மேற்கத்திய சிந்தனைச் தராசில் வைத்து, வக்கிர பார்வையைக் கொண்டு அளவிட்டதன் விபரீதமும் விளைவுமே இதுவாகும்.

புதுவழிகள் என்ற போர்வையில் சமூகத்திசையை மாற்றியமைக்கப் புறப்பட்டுள்ள நவீனத்துவப் போராளிகளின் திசையை நன்றாக அவதானித்து, வசைபாடலையும் அதற்கான இசைதேடலையும் புதுக்குருதி கொண்ட நவயுக ஆளுமைகளும் புத்திஜீவிகளும் நிதானமாக சமூகத்தை வழிநடாத் எத்தனிக்க கடமைப்பட்டுள்ளனர்.

காழ்ப்புணர்ச்சியை கட்டுப்படுத்தி கருத்துச் சொல்வதும் அர்த்தம் கற்பிப்பதும் ஒருவரை ஒருவர் உளப்பூர்வமாகப் புரிந்துகொள்வதுமே காலத்தின் தேவையாகும்.

அதற்காக ஆலிம்களையும் முல்லாக்களையும் இழிவாகப் பார்ப்பதும் பேசுவது விடிவிற்கான விழகள் அல்ல.

9 கருத்துரைகள்:

Alhamdulillah, Truth is always best.

Alhamdhulillah..... baarakallhu feek....
நான் கூற நினைத்த விடயங்களை அல்லாஹ் உங்களை கொண்டு செய்து விட்டான்.
சில சகோதரர்கள் அறியாமை காரணமாக அல்லது அந்நிய சமூகத்தின் மீதான பயம் காரணமாக தங்கள் கண்களையே குத்திக்கொள்கிறார்கள்.... அல்லாஹ் எம்மையும் அவர்களையும் நேர்வழியில் உறுதியாக வைக்கபபோதுமானவன்.

Dear Shiekh, I believed you are pointing this article, http://www.jaffnamuslim.com/2021/01/blog-post_310.html, and from my opinion there is no any bad notes about what you are talking about here. His message is totally different than you pointing out and his all remarks are true. Let's say for example a simple issue that "All women should cover in-full even face & hands".. OK where this method the so called bad-driving mullas got this fathwa??? In Islam, clearly mentioned that should show face and forehand but the dress should not be sexy. You see howmuch we faced problems all over the worlds by covering in-full like a slave. Also, lets say our so called "AALIMS" specially from ACJU, why they are demanding the community to make fasting, make duaa, sleep in home, dont come outside, dont ask our rights...so on if there is any problem? Why...why? Are they know only this way?? or Is Islam teaching only this??... You must have guts before you become the head and you must know all the way what Islam is teaching. See other communities, simply they area barking against the innocent Muslims & Tamil while they push us deeply down to the earth by fake news. So, if we know all the knowledge in right way then only we can fight for the fakes at their way. So, please double check your angry mood and try to calm and try to think how to solve the ongoing issue. Moreover, as you know the ONLY ISLAM GIVES FULL RIGHTS TO THE WOMEN THAN OTHERS. Allah almighty will ask everyone not only for Prayer/Fasting/Umrah/Hajj/Thikr.... Simply the first question is about your knowledge, about your Eiman, About your path... So, we must know all these by practical then only we can answer to almighty. Its belongs to knowledge not belongs to caring the women like A SLAVES... HOPE YOU REALIZE THE ANGRY MOOD... AND GIVING FAKE FATHWAS BY MULLAS ALL THE TIME..! Also, do you know the Indian Mullas they gave fathwah, that dont get vaccination for Covid-19 bcs they just have doubt it may mix any pig materials.. But they cant prove it. By the way, suppose if mixed then we can not use it??? As we all known that you can eat the pig meet as the last chance if you can not find any other food to live. So Covid-19 also like that... So these are the BAD-MULLAS who are driving public in a wrong way and giving trouble for the own community with 5% knowledge...

And what is your title....saying...??? "KALLAATHAAR"!!!
So, if you are SHEIKH then, YOU HAVE "MUST DUTY" to let uneducated to be educated immediately. You must start it now... Dont sleep with your Sheikh logo simply, you will be questioned by almighty for sure....pls

மட மந்திக்கு சூப்பர் அடி

மாஷா அள்ளாஹ்.ஜாஹில்களை புரியவைக்க தேவையான ஆக்கம்.

அக்கட்டுரையில் நிறைய விடங்கள் பேசப்பட்டுள்ளன. இரண்டு சொற்களை நீக்கி விடுங்கள். ஏனையவை பற்றி தங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளோம். அதிகம் சிந்தித்தால் நரகம் போய்விடுவாய் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள் முஸ்லீங்கள் சிந்திப்பதற்கும் உலக சமாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள்.சிரிய யுத்த வேளையில் எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டு மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மடல் நினைவுக்கு வருகிறது. உனது இறைவனின் நெருப்பு என் மானத்தை விட சக்தி கொண்டதென்றால் அது என்னை எரிக்கட்டும்.

Post a comment