இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. பல தடைகள் கஷ்டங்களைத் தாண்டி இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது. வறுமையினால் நாம் பட்ட கஷ்டங்கள் இனித் தீரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
நான் தான் மகளை சைக்கிளில் பாடசாலைக்கும் வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வேன். இதனை சிலர் விமர்சிப்பார்கள். முஸ்லிம் பெண் இப்படி சுற்றுவதா என சீண்டுவார்கள். நான் அதை பொருட்படுத்தவில்லை.
பொதுவான ஊர் விடயங்கள் வந்தால், பெண் என்று ஒதுங்காமல் முன்னின்று செய்வேன். ஊருக்கு பாதைபோடக் கூட நான்தான் முன்னின்று செயற்பட்டேன். நான் யாருக்கும் பயப்படவோ ஒதுங்கவோ மாட்டேன். அந்த தைரியம் தான் சுக்ராவிற்கும் இருக்கிறது. மகளின் வெற்றிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சிலர் பாலித தெவரப் பெருமவுடனான வீடியோவை வைத்து விமர்சித்தும் மதத்தை தொடர்புபடுத்தி கண்டித்தும் வருகிறார்கள்.
எமது முன்னிலையில்தான் அவர் மகளுடன் படம் பிடித்தார். அதனை தவறாக நாம் பார்க்கவில்லை. நல்ல உள்ளத்துடன் அவர் வந்து மகளை மனதார பாராட்டிச் சென்றார். மார்க்கம் என்ற பெயரில் சிலர் இதனை விமர்சித்து வருகிறார்கள். நாம் என்றும் மார்க்கத்திற்கு உட்பட்டே நடக்கிறோம். இறைவனுக்கு பயந்தே எதனையும் செய்கிறோம். பெற்றோராகிய நாங்களே இதனை தவறாக பார்க்காதபோது சிலர் மட்டும் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் என்று கூறி முடித்தார் சுக்ராவின் தாயார்.
5 கருத்துரைகள்:
எங்கட முள்ளாக்களுக்கும் முப்த்திகளுக்கும் மிம்பரில் கத்துவதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம்.
Go Ahead
Dont feel aboit those idiots, just avoid them and go ahead on ur aim... some of the named mullas have tgis kind pf deceased, nevermind
Don't worry sister, bloody fanatic Muslims criticize the close contact with great human Mr. Palitha, who is father figure to this great girl.it is not wrong to be with such a super human.
முஸ்லிம்களின் ஆற்றலையும் ஆழுமையையும் நாடே ஏற்றுக்கொள்ள வைத்தவர்களுள் ஒருவரான சுக்ராவை கண்டிக்க வழிதேடும் சிலரின் செயல் மிகவும் கவலைதருகிறது. என் இளம் வயசில் இப்படி நிலமை இருக்கவில்லை. என் இளம் வயசில் பார்த்த முஸ்லிம்கள் சிறந்த மனிதர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் பெண்களையும் வேற்று மத பெண்களையும் மனிதாபிமானத்துடன் நடத்தினார்கள். ஒரு சிங்கள பத்திரிகையாளர் சொன்ன செய்தியை இங்கு பதிவு செய்கிறேன். ”1970 பதுகளின்பின்னர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு மாறான ஒருபகுதி இளைஞர்கள் தோன்றினார்கள். ஏனை இனத்தவர்களை காபீர் என்றார்கள். ஏனைய இனப்பெண்களை மத ஏழைப் பெண்களை மதம்மாற்றி திருமணம் செய்யவதில் குறியாக இருந்தார்கள். தங்கள் பெண்களை கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தார்கள்.” இத்தகைய கருத்துக்களை கிழக்கு மாகாணத்திலும் கேட்டிருக்கிறேன். அம்பாறையில் நான் நேர்கண்ட ஒருவர் கூற்றையும் இங்கு பதிவு செய்கிறேன். ”நீங்கள் 1990ல் நடந்த காத்தான்குடி தாக்குதலை கண்டிப்பது சரி. ஆனால் அதற்க்குமுன் 1970 பதுகளில் இருந்தே அம்பாறை மாவட்டம் வீரமுனையும் காரைதீவிலும் வீடுகள் கோவில்கள் பலதடவை எரிக்கபட்டதுபற்றியோ கொலைகள் நடந்தது பற்றியோ வாய்திறப்பதில்லை” என என்னை கண்டித்தார். இந்தக் கூற்றுகளை முஸ்லிம் இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும். அரபு நாடுகளை மட்டுமல்ல துருக்கிபோன்ற முஸ்லிம் நாடுகளை முஸ்லிம் இளைஞர்கள் பார்க்க வேண்டும். 1970 பதுகளுக்கு முன்னிருந்த நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப எல்லா தரப்பும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
Post a comment