Header Ads



நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன - பாதுகாப்பு செயலாளர்


இனப்படுகொலை என்ற சொல்லை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் இலங்கையில் சமீப காலத்தில் இனப்படுகொலை என்று எதுவும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

காலனித்து காலத்தில் குறிப்பாக 1813 எழுச்சியின் பின்னர் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் அதன் பின்னர் நாட்டில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டோம் என்றால் ஏன் 300,000 மக்களை வன்னியில் மீட்டோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பெயருக்கும் அரசாங்கத்தின் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெற்றிகரமாக மனிதாபிமான நடவடிக்கையினை முன்னெடுத்ததை ஏற்றுக்கொள்ள சில வலுவான நாடுகள் தயாரில்லை என தெரிவித்துள்ள அவர் அதன் முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக அவர்கள் எங்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் ஆனால் யுத்தத்தின் போது தவிர்க்க முடியாதபடி உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும புரிந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு மோதலில் ஈடுபடும்போது இருதரப்பும் தாக்குதலை மேற்கொள்ளும்போது உயிர்இழப்புகள் தவிர்க்க முடியாதவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என அரசாங்கம் எங்களிற்கு உத்தரவிட்டது ஆனால் அது சாத்தியமில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. பள்ளியில் தொழுதவர்களையும் வயல்களில் வேலை செய்தவர்களையும் மக்கா சென்று வீடு திரும்பியவர்களையும் படுகொலை செய்த பாசிச புலிகளைத்தான் அழித்தார்கள் தன் சொந்த பரம்பரை வீடுகளை விட்டு விரட்டிய படு புலிகளைத்தான் அழித்தார்கள்.

    ReplyDelete
  2. போர்குற்றவாளி ஒருவரின் வாக்குமூலமாகவே இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் எடுத்துக்கொள்ளும். ஐயா இன்னும் இன்னும் அறிக்கைகள் விடுங்க.

    ReplyDelete
  3. போர்குற்றவாளி ஒருவரின் வாக்குமூலமாகவே இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் எடுத்துக்கொள்ளும். ஐயா இன்னும் இன்னும் அறிக்கைகள் விடுங்க.

    ReplyDelete

Powered by Blogger.