Header Ads



ஆரோக்கிய துவாய்களை பெண்களுக்கு இலவசமாக, வழங்குவேன் எனக்கூறிய போது என்னை இழிவுபடுத்தினார்கள் - சஜித்


இன்று  (04.01.2021)எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் தெடர்பாக கருத்துக்களை முன்வைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியானது முற்போக்கு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மக்களின் நலனுக்காக செயற்படுவது தான் அதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்த அவர்,கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களின் சுகாதார விடயம் சார்ந்து இந்த கொள்கையை முன்வைத்தோம்.எமது அரசியல் செயற் திட்டத்தில் முதன்மையான விடயமும்,துரிதமாக நடைமுறைப்படுத்தவுள்ள விடயமுமாகும்.

இந் திட்டத்தை முன்வைத்த போது எதிர் தரப்பினர் மோசமான விதத்தில் இழிவுபடுத்தினர்.எமது நாட்டில் மெத்த சனத் தொகையில் 58.1 வீதமானோர் பெண்கள் ஆகும்.எண்ணிக்கையில் பார்ப்போமானால் 42 இலட்சத்துக்கும் 57 இலட்சத்துக்குமிடைப்பட்ட பெண்கள் இந்த சுகாதார பிரச்சிணைக்கு மாதாந்தம் முகம் கொடுக்குகின்றனர்.30 வீதமான பெண்கள் தான் இதை முறையாக பயன்படுத்துகின்றனர்.அந்த ஆரேக்கிய ஏற்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் பல சுகாதார பிரச்சிணைகளை பெண்கள் எதிர் நோக்குகிறார்கள்.இதன் பயன்பாடு இன்மையால் பல நோய்களுக்கு இவர்கள் முகம் கொடுப்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.சிறு நீர் துவாரத்துடன் இனைந்த நோய்கள்,பற்றீரியா நோய்கள்,கர்பப்பை புற்றுநோய்கள்,தீவிர நீரிழிவு நோய்கள்,கர்ப்பம் தரிக்காமை,சிறு நீர் துவாரங்களை சூழ ஏற்படும் நோய்கள்,பாலுறவில் ஈடுபடும் போது ஏறபடும் நோய்கள் என்பனவற்றுக்கு இந் நாட்டின் பெண்கள் மற்றும் வயது வந்த மணவிகள் முகம் கொடுக்கின்றனர்.

இதனால் கல்வித் துறையில் ஏற்படும் பிரச்சிணைகளை பார்ப்போமானால்,பாடசாலை செல்லும் மொத்த பெண்கள் தொகையில் 3/1 வீதம் அந்த நாட்களில் சமூகமளிக்கப்படுவதில்லை என பல புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.68-84 வீதத்துக்குமிடைப்பட்ட பெண் பிள்ளைகள் இந் நாட்களில் ஏற்படும் உடலியல் ஆரோக்கியமின்மையால் பாதிக்கப்படுவதாகவும்,23-40 வீதத்திற்குட்பட்ட வீத மாணவிகள் இதனோடு இனைந்த வேறும் பல நோய்களுக்கு உட்படுவதாக ஆய்வு ரீதியாக சுட்டிக் காட்டப்படுகின்றன.இதனால் ஒருடமொன்றிற்கு 13 இலட்சம் பாடசாலை நாட்களை மாணவிகள் இழப்பதாகவும் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித் தலைவர்,நாட்டின் பணிக் குழு பங்கேற்பிலும் இது பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. பணிக்குழுவின் பங்கேற்பில் குறைவடைகிறது.

2025 ஆம் ஆண்டாகும் போது பெண்களினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர் உற்பத்தி சார்ந்த இழப்புகளுக்கு இதனால் முகம் கொடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பங்களதேஷ் இல் பெண்களின் சுகாதாரம் தெடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பெண்கள் தொழிறச் சாலை பணிக்கு வரும் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பெண்களின் ஆரோக்கிய துவாய்களுக்கு பல்வேறு வரி அறவிடப்படுகிறது.அதை நீக்குவதற்குரிய ஏற்பாடுகளையேனும் செய்வதற்கு முன்வந்த நிலைப்பாடற்றவர்களாக காணப்படுகின்றனர்.இது பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

ஸ்கொட்லாந்து மொனிகா லெனன் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் முன்வைப்பின் பிரகாரம் 2 வருடத்திற்கு முன்னர் சகல பாடசாலை மாணவிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு பின்னர் நாட்டின் சகல பெண்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இலங்கையிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சிணையை புரிந்து கொள்ள இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறோம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இதை தாங்கள் முன்வைத்த போது எங்களை இழிவு படுத்தினர். இதற்கு தீர்வு வழங்க அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.காலம் தாழ்தியேனும் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக இன்றைய நாட்களில் அறியக் கிடைக்கிறது.அவ்வாறு  நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அதற்கு நன்றி செலுத்தவும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஆரம்பமாக பாடசாலை மாணவிகளுக்கு இதை வழங்கி பின்னர் நாட்டின் சகல பெண்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

1 comment:

  1. That is their way Sir, dont be tiered.... must move and move then only we can kick them out

    ReplyDelete

Powered by Blogger.