January 19, 2021

சிங்களத்தினால் கொண்டாடப்படும் ஷுக்ராவும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்..!


- Shaheed Rizwan -

நேற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில், 

சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்ம பங்குங்கும் நாம ஏதாச்சிம் பண்ணணுமே என்ற கடமையுணர்ச்சியில் முஸ்லிம்களாலும் குறிப்பாக டைம்லைனில் ‘மாஸ்டர்’ ஓப்பனிங் ரேஞ்சுக்கு ஹைப் ஏத்தியிள்ளார் “ஷுக்ரா” !

ம், எங்கும் ஷுக்ரா, எதிலும் ஷுக்ரா, 

வாசித்தல், குறிப்பாக உலகை, நம்மை சுற்றியுள்ளவற்றை, சக மனிதர்களை வாசித்தல் தான் இவரை இந்தளவு உயர்த்தியருக்கிறது, 

அதுவும் தங்களை இந்தளவு வாசித்திருக்கிறாளே! சிங்கள இலக்கியத்தை இந்தளவு தெரிந்திருக்கிறாளே, 

தன்னோட இனத்தினருக்கு கூட இந்தளவு ஞானம் இல்லையே என்ற ஆதங்கம், பூரிப்பு காரணமாகவே சிங்களம் இவரை கொண்டாடுகிறது. 

மற்றது முஸ்லிம் பெண்கள் என்றாலே தகப்பன், சகோதரன், கணவன் போன்ற ஆண்களால் அடக்கி ஆளப்படும், ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விலங்கினமாகவே பெரும்பாண்மையினரால் விளங்கப்பட்டுள்ளனது.

இப்படியான இந்த சமூகத்தில் இருந்து ஒரு விடுதலை பெற்ற பெண்ணாகவே ஷுக்ரா நோக்கப்படுகிறார், அதனாலேயே இந்தளவு கொண்டாடப்படுகிறாரோ என்னவோ!  

முஸ்லிம்கள் என்றாலே “கலாச்சார ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற ஒரு பீதி சிங்கள மக்களிடத்தில் நிலவுகிறது, ஒரு வகையில் அது உண்மையும் தான், 

SP பாலசுப்பரமணியத்தின் மரணத்தையும் முஸ்லிம் கண்ணாடி போட்டு பார்க்கும் சமூகமாச்சே நாம்! 

அந்த கலாச்சார ஆக்கிரமிப்பை கடந்து, கலாச்சார கலப்பு அவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது, 

நாடு என்று வரும் போது நாம் முசம்மில்களாக இருக்க வேண்டும், என்ற எதிர்ப்பார்ப்பின் விளைவு தான் சிங்கள மக்களால் தூக்கிப் பிடிக்கப்படும் ஷுக்ரா.

தன்னோட மகள் இஸ்லாம் சார்ந்த புத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகமும் வாசிக்க கூடாதென்று கண்டிஷன் போடும் முஸ்லிம்களும் ஷுக்ராவை கொண்டாடுவதை பார்க்கும் போது கண்ல ஜலம் கொட்டுது, 

பெண்கள் என்றால் வளைவுகளாலான தமது அழகை மறைப்பது பாவம் என்று பெண்களுக்காக போராடும் ஒரு வகை சேடிஸ்ட்டுகளும் ஷுக்ராவை கொண்டாடுகிறார்கள், இதே ஷுக்ரா அபாயா போட்டு வந்திருந்தால் இங்கு நிலமை வேறு விதமாக மாறியிருக்கலாம்.

ஆனால் இதே ஆண்கள் அரணாக இருக்கும் பெண்ணியம் பேசும் சோனவ மாமிமார் ஷுக்ராவை பற்றி ‘மூச்’ 

எமது சமூகத்தில் அதிகம் ஷுக்ராக்கள் உருவாக வேண்டும், எத்தன பவுண் நகை? என்பதற்கு பதிலாக எத்தனை புத்தகங்கள் வாசித்திருக்கிறாள்? என்ற ஒரு விழிப்பு எமது சமூகத்தில் எழ வேண்டும், 

எமது குழந்தைகள் சக மனிதர்களை வாசிக்கட்டும், சகோதர இனங்களின் கலாச்சாரத்தை, இலக்கியத்தை, அவர்களது வாழ்வியலை படிக்க ஆவன செய்தாக வேண்டும், 

மலர் தட்டுகள் சுமந்து தோழிகளோடு பன்சலை செல்லாத, ஆனால் சில வரையறைகளோடு கூடிய ஷுக்ராக்கள் தான் எமது எதிர்கால மத நல்லிணக்கம் என்பதை புரிந்துகொள்வது தான் இன்றைய தேவை! 

ஞானசாரவையே புத்த புத்திரராக பார்க்கும் வெள்ளந்திகள் தான் மெஜாரிட்டி சிங்கள மக்கள், அவர்களை நாம் தான் பயங்காட்டி தூரமாக தள்ளி விட்டோமோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. 

6 கருத்துரைகள்:

She is a good example .
He has taught Manny lessons for our Islamic groups as well.
She told that her parent Gave freedom but she remained that we should misused it ..
She displayed her knowledge of Sri Lankan history; general knowledge; language skills and above all her braveness to come and speak out without any fear
If only we could create hundreds of shukras..

Teach the Sinhalese about Islam.

சிறந்த கட்டுரை. முஸ்லிம் தலைவர்களாலும் கல்வியாளர்களாலும் ஏற்படுத்த முடியாத பாரிய உளவியல் மாற்றத்தை சின்னம் சிறியவர் ஏற்படுத்தி விட்டார். அவரின் அறிவு விசாலமும், நாவன்மையும்,தெளிவான பேச்சும், அடக்கமும் பார்ப்போர் எவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இனவாத போதையில் இருந்த பெரும்பான்மை இளையோர்கள் ஆடிப் போய் விட்டார்கள். இப்படியானவர்கள் உள்ள ஒரு சமூகத்தை ஓரங்கட்டுவது இழுக்கானது என்று யோசிக்க வைத்து விட்டது. அவருடைய அறிவுத்திறமை நடுவர் அவர்களை பல முறை நிமிர்ந்து உட்கார வைத்து விட்டது. இவ்வாறான வெளியீடுகளே எமது சமூகத்தை தூக்கிவைக்க எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. கலாசாரம் விழுமியம் என்று கூறி இப்பிள்ளையையும் இச்சமூகம் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வராமல் விட்டாலே புண்ணியமாகும்.

வாழ்த்துக்கள் சுக்ரா. மிக நல்ல கட்டுரை.

great...great article....

Post a comment