- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்னைக்கும் வெலிகந்தைக்கும் இடயில் நேற்று (சனிக்கிழமை) இரவு மோட்டார் சைக்கிள் லொறி என்பன நேருக்கு நேர்; மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலயே உயிர் இழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிhர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் ஹேரத் என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று சனிக்கிழமை இரவு தனது கடமையின் பின்னர் விடுமுறையில் தனது சொந்த பிரதேசமான வாரியபொல பிரதேசத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே கேஸ் சிலின்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதியதிலயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருவதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மரணமடைந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment