Header Ads



உடல்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர், ஆர்ப்பாட்டம் செய்வது அரசியல் நோக்கம் கொண்டது - ஜோன்ஸ்டன்


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக, முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது, இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும், கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தவேளை எவரும் அதற்கு எதிராக கரிசனைகளை வெளியிடவில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன்எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் -அது பிழை என தெரிவிப்பார்கள் என்றால் கத்தோலிக்க மக்களும் அது குறித்த கரிசனையை வெளியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லைஎன அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது ஒரு இனத்திற்கு மாத்திரம் உரிய விடயமில்லை.

சிலவங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர்என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிபபடையில் உடல்களை தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என ஆராய்வதை விட நாங்கள் பொதுமக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தங்கள் வங்குரோத்து அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பல அறிக்கைகளை வெளியிடுகி;ன்றது எனவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகள் குறித்து ஜனாதிபதியோ அரசாங்கமோ தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது சுகாதார அதிகாரிகளே இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஒரு குழுவினர் இந்த விவகாரத்தினை இனரீதியிலானதாக மாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. You are a fool. You deny human rights.

    ReplyDelete
  2. shinkala isis terrorist , looter of satohsa , dont talk lie, no political purpose , on be half of muslim , non muslim , our some organization are get in field to get back rights

    thugs goverment , what happened china virus fund ?
    why economic gone down ?
    why sold ceylon proprty?
    why 2000 ukraain tourist bring to this country , most of them affected by china virus , onceagain to make lockdown?

    foolishg shinkla?

    ReplyDelete
  3. You are also cremating the muslim janazas for petty political mileage.

    ReplyDelete
  4. For you, The democratic act of Protesting against Cremation is politically motivated. What about the very Action of the Govt. in Insisting on Cremation ONLY? Isn't that a politically motivated action by the Govt. which is losing popularity, and is trying to play to the Sinhala Racist gallery?

    When did the WHO insist on Cremation Only? Why don't you Prove that instead of telling Lies and making IRRESPONSIBLE Claims?

    ReplyDelete
  5. no no no , racist idiot listen, Muslim community is fighting for it, not politician

    ReplyDelete
  6. You missed the word burial on WHO guideline. Government should publish the names of the Health technical committee and their qualifications.

    Dilum Amunugama MP says President has to take final decision but you says on opposite way.

    ReplyDelete

Powered by Blogger.