Header Ads



குளிரூட்டி கொள்கலனில் இருந்த, சகல ஜனாஸாக்களும் எரிக்கப்பட்டன - பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தையடுத்து அவசரம்


கொரோனா தொற்றினால் மரணித்ததாக, கூறப்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள், கடந்த சில தினங்களில் எரிக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை சமூக சேவையாளர் ஹுஸைன் போல்ட், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

ஜனாஸாக்களை அடக்குவதா அல்லது எரிப்பதா என்பது தொடர்பில், ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில்,  குளிரூட்டப்பட்ட கொள்கலனில் ஜனாஸாக்களை வைத்துப் பாதுகாப்பதற்கு இணக்கம் ஏற்பட்டிருந்தது.

எனினும், அண்மையில் பிக்குகள் ஜனாஸாக்களை எரிக்க வேண்டுமென வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தார்கள். இதன்போது ஆர்ப்பாட்ட இடத்துக்குச்சென்ற சுகாதார அமைச்சர் பவித்திரா, அவர்களுடன் நேரடி பேச்சிலும் பங்கேற்றார்.

இந்த நிலையிலேயே முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு, குளிரூட்டி கொள்கலனில் பாதுகாக்கப்பட்டு வந்த ஜனாஸாக்கள் உடனடியாக எரிக்கப்பட்டுள்ளன.

5 comments:

  1. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  2. If it is a medical issue who should insist for disposal of these body, obviously its medical personnel, not the monks. It clearly shows this country is ruled by racist monks.

    ReplyDelete
  3. எலி அறுக்கும் தூக்காது.இது பழமொழி. நமது ஆர்ப்பாட்டங்கள் மையத்தை எரிக்கத் தூண்டியது. இது புதுமொழி.
    நமது அறிஞர்களும் ஞானம் படைத்தவர்களும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் சில சின்னப் பயலுகளுடைய விளையாட்டு எதிர் வினையாற்றியுள்ளது.
    சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது இதுதான்
    முஸ்லிம் சமூகம் தொழுகையைக் கொண்டும் பொறுமையை கொண்டும் அல்லாஹுவை நெருங்குவதை விட மாற்றுவழி இல்லை.

    ReplyDelete
  4. ஏன் லாபிரு இதற்கு முன் உங்க அரசு அடக்கி கொண்டு தானே இருந்தாங்க.

    ReplyDelete
  5. சலீமு, மேலேயுள்ள செய்தியையும் எனது கருத்தையும் மீண்டும் பலமுறை வாசியும்

    ReplyDelete

Powered by Blogger.