Header Ads



திஸ்ஸவின் புதல்விக்கு முக்கிய பதவி, தொலைபேசிக்குள் குமுறல்


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் புதல்விக்கு அரச தூதரகத்துறையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கருத்துக்களை கேட்டுள்ளதுடன், அவர் எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் நிச்சயமற்ற நிலைமை உருவாகியுள்ளது.

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்க முன்னின்று செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வந்தார்.

திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் முதல் செயற்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அந்த சூடு அடங்கும் முன்னர், இப்படியான சம்பவம் நடத்துள்ளமை, கட்சியினர் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவின் புதல்வியான துல்மினி இந்திரசாப்பா அத்தநாயக்க அவுஸ்திரேலியாவின் கென்பராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக வெளிவிவகார அமைச்சு சில தினங்களுக்கு முன்னர் நியமித்தது.

அத்தநாயக்கவின் புதல்வி தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வருகிறார்.

No comments

Powered by Blogger.