- Rajalingam Rasiah -
நாங்கள் வாழும் ஹுனுப்பிட்டிய பகுதியில் வறிய நிலையில் உள்ள ஒரு தமிழ் மூதாட்டியின் திடீர் மரணம் சம்பவித்து விட்டது.
ஏற்கனவே துன்ப நிலையிலுள்ள இவரின் குடும்பம் இந்த மூதாட்டியின் இறுதிக் கிரியைகளை செய்வதில் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கியது.
இந்நிலையில் இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் முன்வந்து அவருக்காக நிதி சேகரித்து அவரின் ஈமக்கிரியைகளை சிறப்பாக செய்து முடிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இனவாதம் மத பிரிவினைவாதம் என்று பிரச்சினைகள் இருக்கும் நிலையில் நாங்கள் வாழும் ஹுனுப்பிட்டி பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதைக் காணும்போது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நிலைமை தொடர வேண்டும். ஏனைய மக்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
3 கருத்துரைகள்:
masha allah
இனவாதம் மதவாதம் பேசும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மதபோதகர்களிடமிருந்தும் விலகியிருந்தால் சகோதரத்துவம் தப்பிப் பிழைக்கும்.
Eamaaniaullathil thaan unnmaiyaana இரக்கம்iஇருக்கும்
Post a comment