Header Ads



ரொத்ஸ்சைல்ட் குடும்ப அங்கத்தவர் இலங்கை வருகை


இலங்கையில் பாரிய தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய ரொத்ஸ்சைல்ட் குடும்ப அங்கத்தவர் இலங்கை வருகை

உலக பிரசித்த பெற்ற வர்த்தகக் குடும்பமான ரொத்ஸ்சைல்ட் (Rothschild) குடும்பத்தின் அங்கத்தவரான நெதானியல் ரொத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (12) மாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அறியமுடிகின்றது.

49 வயதான அவர், பல தசாப்தங்கள் பழமை வாய்ந்த ஐரோப்பிய வங்கியியல் ராஜவம்சத்தின் வாரிசு என்பதுடன், ஜேக்கப் ரொத்ஸ்சைல்டின் ஒரே மகனாவார்.

ரொத்ஸ்சைல்ட் ராஜவம்சத்தின் வரலாறு அப்போதைய சிலோன் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஒன்றாகும்.

The Rothschilds are close relatives of German Jewish brothers, Maurice, Gabriel, and Baron Solomon de Worms who are tipped as the pioneers of tea planting in the island.

ரொத்ஸ்சைல்ட் ராஜவம்சத்தினர் இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிற்துறையின் முன்னோடிகளான ஜேர்மனிய யூத சகோதரர்களான மோரிஸ், கேப்ரியல் மற்றும் பெரோன் சொலமன் டி வார்ம்ஸின் நெருங்கிய உறவினர்களாவர்.

கேப்ரியல் டி வார்ம்ஸ் 1800-களில் சிலோனின் சட்டவாக்க கழகத்தின் உறுப்பினராக செயற்பட்டிருந்தார்.

மோரிஸ் சீனாவில் இருந்து இலங்கைக்கு தேயிலைக் கன்றுகளை கொண்டு வந்தவராவார்.

இவர்கள் இலங்கையில் மிகப்பெரிய மற்றும் சிறந்த விளைச்சலைத் தந்த கோப்பி பயிர் செய்கையின் உரிமையாளர்களாக திகழ்ந்ததுடன், டி வார்ம்ஸ் இலங்கை கோப்பியை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தவராவார்.

எனினும், 1869 இல் ஏற்பட்ட நோய்த்தாக்கத்தினால் கோப்பி செய்கை பாதிக்கப்பட்டதால், மாற்றீடாக தேயிலை செய்கையை மேற்கொண்டனர்.

அவர்கள் இலங்கைத் தீவில் பாரிய தேயிலைத்தோட்டங்களை உருவாக்கியதுடன் அதற்கு ரொத்ஸ்சைல்ட் எஸ்டேட் எனவும் பெயரிட்டனர்.

No comments

Powered by Blogger.