Header Ads



காதிமார்களை இணைப்பதற்கும், நீதி அமைச்சிற்கும் தொடர்பில்லை - அலி சப்ரி


காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்திற்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சிற்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது.

காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது.

அந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்காகவே காதிமார்கள் இணைக்கப்படுகின்றனர்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கும் நீதியமைச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களே! உங்கள் பதில்களை அவதானிககும் போது நீங்கள் பயந்தாங் கொல்லியாகத்தான் தெரிகிறது. வாயில் வந்ததையெல்லாம் கொட்டிக்குவிக்கும் இனவாதிகள்,துரோகிகளின் பேச்சுகளுக்கு பதில் சொல்ல நீங்கள் ஆரம்பித்தால், உங்களால் நிச்சியம் அந்தப் பதவியை வகிக்க முடியாமல் போவது மட்டுமன்றி வெறும் விரக்திநிலைக்கும் தள்ளப்படுவீரகள். தயவுசெய்து தேவையற்றவைகளையெல்லாம் தலையில் போட்டுக் கொண்டு அவற்றுக்குப்பதில் சொல்ல முயலும் உங்கள் போக்கைச் சற்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி பதில் கூறுவது நிச்சியம் உங்களை மென்மேலும் சிக்கலில் மாட்டும். நிதானமாகவும் தைரியமாகவும் தொழில் செய்வது சிரமமாக இருந்தால் உங்களால் இ்ந்தப் பதவியைத் தொடரமுடியாது என்பதை மாத்திரம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. poiyyum purattum keli kootthum tewayillai... thayavu seithu samooogattai vittu vidungal...pls

    ReplyDelete

Powered by Blogger.