Header Ads



உக்ரைன் கொத்தணி உருவானால், அதற்கு யார் பொறுப்பு - ஜேவிபி கேள்வி


உக்ரைன் கொத்தணியொன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பு என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச செய்தியாளர் மாநாட்டில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

சில டொலர்களிற்காக உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்து அரசாங்கம் முழு நாட்டிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரசின் இரண்டவாது அலை பிரன்டிக்சில் உக்ரைன் பிரஜை மூலமாகவே உருவானது என தகவல்கள் வெளியாகியிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொது இலங்கைக்கு அழைத்துவரப்பட்டள்ள உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் புதிய கொத்தணி உருவானால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள நாடு என குறிப்பிட்டு;ள்ள அவர் அந்த நாட்டில் 1.1மில்லியன் கொரோனா நோயாளர்கள் உள்ளனர்,19,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் நாளாந்தம் 11,000 நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 8ம்திகதி முதல் 24 ம் திகதி வரை நாட்டை முடக்கவேண்டும் என அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்? பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன எனசுட்டிக்காட்டியுள்ள நளின் ஜயதிச பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அந்த நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது,அவ்வாறான நாட்டிலிருந்து நாங்கள் சுற்றுலாப்பயணிகளை கொண்டுவருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

இவ்வளவு ஆபத்துக்கள் காணப்படுகின்ற நிலையில் உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரவேண்டுமாஎனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை நன்மை அடையவில்லை உதயங்கவீரதுங்க அரசாங்கத்திற்கு நெருக்கமான வர்த்தகர்களே நன்மையடைகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப்பயணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் சுற்றுலாப்பயணிகள் அழைத்துச்செல்லப்படவில்லை மாறாக முக்கிய அரசியல்வாதியின் நெருங்கிய உறவினரே அவர்களை அழைத்துச்செல்கின்றார் அவர் இந்த துறையில் அனுபவமில்லாதவர் என தெரிவித்துள்ள ஜேவியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துடன் நெருக்கமான ஹோட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உதயங்க போன்ற சிறிய எண்ணிக்கையிலானவர்களின் நன்மைக்கா நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தவேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.