Header Ads



மனித உரிமை ஆணையாளரினால் இலங்கை தொடர்பான கடும் அறிக்கை - உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்



இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளது.

ஜெனீவா அமர்விற்கு முன்னரே அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள ஐநா வட்டாரங்கள் அந்த அறிக்கை தாக்கம் செலுத்துவதாகயிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அறிக்கையை முன்கூட்டியே வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அரசாங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மக்களிற்கு பகிரங்கப்படுத்துவோம் என ஐநா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலக அறிக்கை கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்றுவரை அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையை இலங்கை சமர்ப்பிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22ம் திகதி முதல் மார்ச் முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கை குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார், குறிப்பிட்ட அறிக்கையில் அவர் மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதமை தொடர்பில் கடும் கண்டனங்களை முன்வைக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.