Header Ads



ஒரு தேங்காய் திருடியவர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை


தேங்காய் ஒன்று திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதிமன்றம் இவ்வாறு இன்றைய தினம் -19- பிணை வழங்கியுள்ளது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தேங்காய் ஒன்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை தென்னந்தோப்பு உரிமையாளரும், அவரது மகனும் இணைந்து பிடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரை கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரட்ன விடுதலை செய்துள்ளார்.

மல்வத்துஹிரிபிட்டிய நில்மஹர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

4 comments:

  1. இன்று ஓரு தேங்காய் இதற்கு முன் எத்தனையாம்? இத்தன்டனை இல்லாவிட்டால் இதற்கு பின் எத்தனையாம்?

    ReplyDelete
  2. The Bail amount works out to 1,000 times the value of a stolen coconut. Will those who Rob Billions, also be asked to pay 1000 times the amount they Robb?

    If a guy could afford to pay Rs.100,000 as Bail, why would he steal a coconut worth Rs. 100/-? Sri Lanka, Strange country with even Stranger Judges and Thieves.

    ReplyDelete
  3. தேங்காய் திருடியவருக்கு,அவரைப் பிணையில் விடுதலை செய்ய தெண்டம் தேங்காயின் பெறுமதியைவிட ஆயிரம் மடங்கு எனில் சீனி இறக்குமதி மோசடி மூலம் திறைசேரிக்கு பத்து பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியதனால் அது தொடர்பானவர்களுக்கு தெண்டப்பணமாக ஒரு திரில்லியன் ரூபா தெண்டமாக நியமிப்பதுதான் நியாயம்.

    ReplyDelete
  4. தேங்காய் திருடுவதும் ஒரு சவரின் தங்கம் திருடுவதும் இந்தக் காலத்தில் சமமானதுதான். இவ் இரண்டு பொருள்களும் அவ்வளவு மதிப்புமிக்கதாக விளங்குகின்றது. தங்கம் திருடுகின்றார்கள் தம் பெண்களின் கழுத்தை அழகுபடுத்துவதற்கு. தேங்காய் திருடுகின்றார்கள் தம் வீட்டுக் கறியினை அழகுபடுத்துவதற்கு.. வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் இரண்டும் திருட்டுதான்.

    ReplyDelete

Powered by Blogger.