Header Ads



இலங்கையில் பாகிஸ்தானை களம் இறக்குகிறதா சீனா..?

( Sethu, இது Jaffna Muslim இணையத்தின் கருத்துக்கள் அல்ல. இங்கு எழுதப்பட்டுள்ளவை கட்டுரையாளருக்கே சொந்தம்)

சீனா - இலங்கை விடயத்தை கையாள தனது நட்பு நாடான பாகிஸ்தானை களம் இறக்குகிறதா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

ஏற்கனவே கொரோணா வைரஸ் ஊடாக உலகை முடக்கி தனது செயற்பாட்டு வலயத்திற்குள் கொண்டுவந்துள்ள சீனா, உலக வல்லரசு நாடுகளையெல்லாம் தனது நிகழ்சி நிரலின் கீழ் செயற்பட வைத்துள்ளது.

லொக்டவுன், தனிமைப்படுத்தல், பி.சி.ஆர், மாவட்ட முடக்கம்,மாகண முடக்கம், நாட்டை முடக்குதல் முக கவசம், தொற்று நீக்கிகள் என ஒரு சிஸ்டத்தை உருவாக்கி அதன்படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் சீனா உருவாக்கியுள்ளது.

ஆக மொத்தத்தில் விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ உலகமே சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிகொண்டு இருக்கிறது. அவ்வாறு இயங்க வேண்டிய கட்டாயத்தை சீனா உருவாக்கி உள்ளது.

கொரோணா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக சீனா பாரிய வளர்ச்சி அடைந்து வருவதுடன் தனக்கு பொருளாதார ரீதியாக போட்டியாக இருந்த நாடுகளை எல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது.

இன் நிலையில் இலங்கையை குட்டி சீனாவாக மாற்றும் முயற்சியில் தற்போது சீனா மிக தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இதுவரை இலங்கையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்திய சீனா தற்போது தனது நட்பு நாடான பாகிஸ்தானை களம் இறக்கி உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் இலங்கையில் கால் ஊன்றி தாராளமாக செயற்பட்டு வரும் நிலையில், தற்போது இராச்சிய அரசியல் ரீதியாக இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானை சீனா களம் இறக்கியுள்ளது.

இலங்கையில் கொரோணா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிப்பது தொடர்பாக முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள பாரிய எதிர்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தானை ஒரு சமாதான தூதுவராக இலங்கைக்கு அனுப்பப சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

முஸ்லீம் ஜனாச எரிப்பு விவகாரம் இலங்கை அரசுக்கு எதிராக முஸ்லீம் மக்களை ஒன்று பட வைத்துள்ளதுடன், பிளவு பட்டிருந்த தமிழ் முஸ்லீம் உறவை மீள கட்டியெழுப்புவதற்கும் வழியமைத்து கொடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள முஸ்லீம் மக்களின் இந்த எதிர்ப்பலை சர்வதேச ரீதியில் முஸ்லீம் நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீதான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

இன் நிலையில் எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயம் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் போது அதற்கு ஆதரவாக முஸ்லீம் நாடுகள் கையுயர்த்த கூடும் என்பதால் இந்த விடயத்தை இலங்கைக்கு ஆதரவாக மாற்றுவதற்கு சீனா பாகிஸ்தானை நேரடியாக களம் இறக்கவுள்ளது.

இதற்காக மிக விரைவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் உள்ள முஸ்லீம் தலைவர்கள், முஸ்லீம் சிவில் அமைப்புக்களை சந்தித்து இந்த விடயத்தில் இலங்கை அரசுடன் இணங்கி செல்லுமாறு அவர் அறிவுரை வழங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் வெற்றி!

இலங்கையை சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தும் சீனாவின் திட்டம் வெற்றியளித்துள்ளது.

சர்வதேச ரீதியாக இலங்கை மீதான எதிர்ப்புகளை உருவாக்கி சர்வதேச ரீதியாக இலங்கையை தனிமைப்படுத்தினால் மாத்திரமே இலங்கை தொடர்ந்தும் சீனாவின் காலடியில் கிடக்கும் என்ற சீனாவின் வியூகம் வெற்றியளித்துள்ளது.

இந்திய, அமெரிக்க நாடுகளை புறந்தள்ளி இலங்கையை இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனிமைப்படுத்தி தனது காலடிக்கு இலங்கையை சீனா கொண்டுவந்துள்ளது.

தற்போது இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் கால் ஊன்றி தாராளமாக செயற்பட்டு வருகிறது.

தற்போது சீனாவின் கம்யூனிஸ்டு கொள்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நாடாக இலங்கை மாறி வருகிறது.

இலங்கையின் சமூக,பொருளாதார, அரசியல் ரீதியான கொள்கைகளில் சீன கம்யூனிஸம் அதிக தாக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளன.

இதனால் எதிர் காலத்தில் சிறுபான்மை இன மக்கள் மீதான அடுக்கு முறைகள், பேரினவாத செயற்பாடுகள் அதிகரிக்க கூடும் என்பதுடன் இலங்கையில் ஒரு இராணுவ ஆட்சிக்குறிய அரசாங்கமே கட்டியெழுப்பப்படும் என்பதே உண்மை.


3 comments:

Powered by Blogger.