Header Ads



சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படியே கொரோனா உடல்கள் பற்றி இறுதிமுடிவு எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர்


சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் நிபுணர் குழுவொன்றின் அடிப்படையில் உடல்களை தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக நிபுணர் குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே உடல்களை தகனம் செய்யும் முடிவு மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடகாலமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. பன்னாடை கலா எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள் உலகம் முழுவதும் அடக்கம்தான் செய்கின்றார்கள் விரும்பியவர்கள் தான் தகனம் செய்கின்றார்கள்.

    இதுபோலத்தான் முள்லி வாய்க்கால் படுகொலையையும் சர்வதேசத்திடம் பொய் கூறினீர்கள்.

    ReplyDelete
  2. அறிக்கைகளை அரசியலவாதிகள் விடும்போது மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும். எந்த நாட்டில் கொவிட்டால் இறந்தவரகளின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படுகின்றன. அவரவர் விருப்பத்தின்படியே உடலங்கள் கையாளப்படுகின்றன. கட்டாயத் தகனத்தைச் செயற்படுத்தும் நாடுகள் இலங்கையும் சீனாவுமே. மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. நாட்டு மக்கள் விழிப்புடன்தான் இருக்கினறனர். ஆனால் வம்புக்கு வசைபாட முன்வருவோர் மக்களை திசைதிருப்பத் துடிக்கின்றனர்.

    ReplyDelete
  3. அறிக்கைகளை அரசியலவாதிகள் விடும்போது மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும். எந்த நாட்டில் கொவிட்டால் இறந்தவரகளின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படுகின்றன. அவரவர் விருப்பத்தின்படியே உடலங்கள் கையாளப்படுகின்றன. கட்டாயத் தகனத்தைச் செயற்படுத்தும் நாடுகள் இலங்கையும் சீனாவுமே. மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. நாட்டு மக்கள் விழிப்புடன்தான் இருக்கினறனர். ஆனால் வம்புக்கு வசைபாட முன்வருவோர் மக்களை திசைதிருப்பத் துடிக்கின்றனர்.

    ReplyDelete
  4. "உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால்...." என்று இவர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது இவர் உலகைப் பற்றிய அறிவு அறவே இல்லாத அமைச்சர் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. Second para is wrong only Sri lanka and certain parts in China doing on creamation.

    ReplyDelete

Powered by Blogger.