Header Ads



வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளர்கள் - தொற்று அதிகரிக்க காரணமாகும் என எச்சரிக்கை


கம்பஹா மாவட்டத்தில் நேற்று -28- மாலை சுமார் 200 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடவசதிகள் இல்லாத காரணததினால், இந்த கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையானது தொற்று பரவல் மேலும் அதிகரிக்க காரணமாக அமையும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த கொரோனா தொற்றாளர்கள் கடந்த 18ஆம் திகதிக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள்.

வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடங்கள் கிடைக்கும் விதத்தில் இவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்க உள்ளதாக கம்பஹா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.