Header Ads



கொரோனா உடல்களை அடக்குவதில் சிக்கல் இல்லையென, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த திட்டம்


(எம்.மனோசித்ரா + 
மெட்றோ)

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தேவைப்படின் அடக்கம் செய்யலாம். இதனால் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படா என்பதை நிபுணத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கும் விரைவாக தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் மரணங்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டுவரும் நிலையில், அதற்கு எதிராக கடும் எதிர்ப்பு நடவடிக்கைளும் விமர்சனங்களும் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில் மேற்கண்டவாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இலங்கை மருத்துவ சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால், அவ்வாறான சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்வதால் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படா என்பதை நாம் மேற்கொண்ட நிபுணத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளோம்.

இதனடிப்படையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தேவைப்படின் நாட்டில் அடக்க செய்வதில் எவ்விதமான சிக்கலும் இல்லை என்பதே இலங்கை மருத்துவ சபையின் நிலைப்பாடாகும்.

இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உடன் அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாட்டு மக்களுக்கு இந்த விடயம்தொடர்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழு அளவில் விளக்கமளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி மெட்ரோ நியூஸ் http://metronews.lk/article/126833

6 comments:

  1. இவ்வளவு நாளும் என்ன தூங்கிக்கிட்டா இருந்தீங்க?

    ReplyDelete
  2. நிச்சயமாக நாட்டு மக்களுக்குதுறவி தெளிவுபடுத்துவதனூடாக வன்போக்களர்களைத் தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. இல்லையேல் அவர்கள் மக்களைக் குழப்பும் வேலையைசுபாவம் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

    ReplyDelete
  3. 10000000 salute you madam.....we dont care what racist gov. decision will be, just we need from our loved sri-lankan doctors

    ReplyDelete
  4. நாட்டுமக்கள் விரும்பாதவற்றை திணிக்கும் அரசு, ஏன் சுகாதார அமைப்பினர் சொல்லும் முடிவை அமுல் படுத்த முடியாது.

    ReplyDelete
  5. Yes it is true. How to convince the racist politicians who don't have a common sence.

    ReplyDelete
  6. நிதானமாக அவதானிககும போது இதுவும் நாடகத்தின் இறுதிக்கட்டம் போல் தான தெரிகிறது. இதுவரையும் நன்றாகத தெரிநத உண்மையை இதுவரை மறைத்துவிடடு ஏன் இவ்வளவு தாமதமாகத் தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.