Header Ads



அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள் எதிர்ப்பு - கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை – பிரதமர்


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வௌிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுவதற்குரிய தேவை யாருக்கும் கிடையாது எனவும் கிழக்கு முனையம் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதற்கான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை எனவும் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஏற்கனவே பயம் காரணமாம இந்தியாவுக்கு ECT கொடுத்தாகிவிட்டது.

    அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கும், கொழும்பு ECT, திருகோணமலை, KKS ஆகிய துறைமகஙலகளும், பலாலி airportம் இந்தியாவுக்கும் கொடுத்தாகிவிட்டது

    ReplyDelete
  2. How can people take your words seriously?

    Do you remember that on or about the 10th December, last, at a Meeting you summoned with the Health Ministry Officials, you were in favour of allowing the Muslims to bury the Janaza of Covid-19 victims. When you asked the Officials for a list of suitable places in the country to Bury the Janazas, they wanted one week's time to provide the list. You refused to give them one week's time and demanded the list in 2 day's time at most. You were in such a mighty hurry then.

    More than 7 weeks have since passed and NOTHING has changed and you have NOT said a word about the matter and are maintaining a STONY SILENCE. And the Govt. Policy on Cremation continues in spite of your sincere wish to change it and allow Burial.

    Obviously, there is/are other/s More Powerful than you Now whose will prevails. You are NOT the Same Mahinda Rajapakse of yester years when your words carried a LOT of WEIGHT and POWER. We Feel Very SAD at your PATHETIC situation though you yourself Created it.

    ReplyDelete

Powered by Blogger.