Header Ads



இந்நாட்டு மக்களின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல்


தேசிய சொத்துக்களை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக அன்றிருந்த அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் இருப்பதாக நாமல் ராஜபக்ஸ கூறினார்.

அரசாங்கம் என்ற வகையில், அமைச்சரவையில் ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். அத்துடன், அனைத்து விடயங்களையும் ஆராய வேண்டும். இந்நாட்டு மக்களின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ள வேண்டும். ​தேசிய தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போது, நாம் ஒன்றாக வௌியில் இறங்கி போராடினோம். அது மாத்திரமின்றி சிறைக்கும் சென்றோம். தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்கு நாம் போராடியமையினால் அந்த நிலைமை ஏற்பட்டது. எனினும், அன்று துறைமுகத்தை முழுமையாக விற்கும் போது மௌனமாக இருந்தவர்கள், தற்போது முனையம் தொடர்பில் பேசுகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது தேசிய சொத்தில்லையா என்று நாம் அவர்களிடம் கேட்கின்றோம்

என நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. நாட்டின் சொத்துக்களையும் பொதுமக்களின் உடைமைகளையும் பாதுகாக்க என்ற ஒரே நோக்கத்துக்காக சொந்த வாழ்க்ைகயைத் துறந்து நாட்டுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்த வீரனின் வார்த்தைகளைப் பாருங்களேன். இதுதான் தியாகம்,அர்ப்பணிப்பு.

    ReplyDelete
  2. இராஜபக்ஷ குடும்பததினர் பல விடயங்களைப்பற்றியும் மிகவும் அழகாகப் பேசி வருகின்றனர். மிகவும் மகிழ்ச்சி. தேசிய சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதில் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கின்றனர். அந்த அவதானத்தில் ஒரு சிறு பகுதியையாவது கொவிட் 19 முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்கும் விடயததிலும் நாமல் போன்ற நடுநிலைவாதிகள் வாயைத் திறந்து பேச முன்வர வேண்டும். அப்பாவைப்போல் அல்லது மாமாக்களைப்போல் இருக்கக்கூடாது. அரசியல் தலைமை என்ற அடிப்படையில் நாட்டின் ஒரு இனம் இனவாதத்தினால் கொடுரமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு வீட்டில் இருந்து நிம்மதியாக சாப்பிட முடியும். வாழும் வளரும் பிள்ளைகள். சமூகத்தில் எல்லா இடங்களிலும் இடம் பிடிக்க முயற்சிக்க வேண்டும். மக்களைப்பற்றி கொஞ்ஞம் யோசிப்பதற்கும் நேரம் கொடுங்கள். இனவாதம் பேசுபவர்களுடன் சேர்ந்து திரியாதீர்கள். அவரகளுடன் நட்புறவு கொள்ளாதீர்கள். அவரகள் உங்கள் சிந்தனையில் நங்ஞைக் கலந்து விடுவர்.

    The Rajapakse family has been talking beautifully about many things. I am very happy about it. The people of the country are all very careful and observant that national assets should be properly protected. Neutrals like you must come forward and speak out on the burning of Covid19 Muslim dead-bodies. Don’t be like dad or uncles. How can one eat peacefully at home, and be with their family in happy when a brother-race in the country is brutally affected by racism in terms of political leadership. You are a living and growing young lad. You must try to take place everywhere in the community. Give yourself time to think a little bit about all sector of people. Do not associate with racist speakers. Do not befriend them. That will mix poison in your thinking.

    ReplyDelete

Powered by Blogger.