Header Ads



உடல்களை தகனம் செய்வதா..? அடக்கம் செய்வதா..? என வாதம் புரிவோர் கற்காலத்தை சேர்ந்தவர்கள் - விமல் வீரவங்ஸ


ஒரு சில விடயங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் செயற்படும் விதத்தில் பிரச்சினையுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார். 

´அத தெரண 360´ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். 

´பதியூதினின் முறையற்ற சொத்து சேர்ப்பு விடயத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவது பிரச்சினைக்குரியது. புலாய்வு பொலிஸார் இதற்கு பதிலளிக்க வேண்டும்´ 

கேள்வி: இது குறித்து நீதியமைச்சரிடம் கேட்க முடியுமல்லவா? 

விமல்: கேட்டுள்ளேன். 

கேள்வி: சட்டத்திலிருந்து யார் விடுபட முயற்சிக்கின்றார்கள்? 

விமல்: பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்துறைக்கு பொறுப்பாளர் செயலாளர் அல்லது குற்றப்புலனாய்வு பணிப்பாளர் மீது நாம் தேவையற்ற அழுத்தத்தை பிரயோகிக்க போவதில்லை. இந்த நிறுவனங்கள் சில மிகவும் ஊழல் நிறைந்தவை என்பதால் அவற்றில் மந்தநிலை உள்ளது என்´பதை உணர முடிகின்றது. அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்றது. 

கேள்வி: நான் அறிந்தளவில் அசால் சாலி தற்போதும் வீட்டில் இருக்கின்றார். சில சட்;டத்தரணிகள் பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கு எதிராக முறையிட்டனர். ஊடகங்களிலும் அந்த செய்தி வெளியானது. ஆனால் இப்போதும் அவர் வீட்டில் இருக்கின்றார்? 

விமல்: இது அரசாங்கத்தை கேலிக்குட்படுத்திய விடயம். ஆவர் கொவிட் தொற்றாள் உயிரிப்பவர்களை தகனம் செய்யக் கூடாது எனவும் மாறாக அடக்கம் செய்ய வேண்டும் என அச்சுறுத்தினார். அது எனக்கான அச்சுறுத்தல் இல்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது அரசாங்கத்தில் உள்ள முதுகெலும்புள்ளவர்களின் கடமை.. ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு கடளள் ஆசிர்வதிக்க வேண்டும். சடலங்களை தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் வாதம் புரிவோர் கற்காலத்தை சேர்ந்தவர்கள்.

5 comments:

  1. 2021 கற்காலம்தான்

    ReplyDelete
  2. பிரித் ஓதிய தண்ணீர ஆத்துக்களை ஊற்றிய போது இந்த கற்காலம் எங்க போச்சுது.

    ReplyDelete
  3. world organization and court need to think about death penalty for this culprit as he made so many murder and crime in minority,

    ReplyDelete
  4. அப்ப முட்டி? 🤔

    ReplyDelete
  5. You say that those who object to cremation belong to the Stone Age. To what age do those who insist on Cremation ONLY when Almost ALL countries in the world, which includes the most Advanced and Developed countries, PERMIT Burial?

    ReplyDelete

Powered by Blogger.