Header Ads



சமூக சமயப் பணி செய்பவர்களை கேவலப்படுத்தி, கொடுமைப்படுத்துவதை சமூகம் நிறுத்துமா...?


- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -

உலக வரலாற்றில் உண்மைக்கும் பொய்க்குமான தொடரான போராட்டம் நடந்து வருகின்றது. அல்குர்ஆன் இது பற்றி மிகத்தெளிவாக வர்ணித்து வருகிறது.  நபித்துவத்தை கொண்டுவந்த நபிமார்கள் உண்மையின் பக்கம் இருந்தார்கள். அவர்களை நிராகரித்தவர்கள், ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் பொய்கையிலும் உலக மiயையிலும் மூழ்கி இருந்தார்கள். நபிமார்களுக்கு எதிரான அந்தப் பொய்கையில் இருந்தவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையில், பலமான ஆட்சி அதிகாரங்களுடன், சொத்து செல்வங்களுடன், படைகள் மக்கள் மக்கள் ஆதரவுடன் என எல்லாவிதமான வளங்களும் நிறைந்தவர்களாக காணப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபித்துவத்தை சுமந்துவந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வர்களாக எத்தகைய வளங்களும் அற்றவர்களாகவே தமது சமூகத்தின் மன்றில் தமது தூயபணியினை முன்வைத்தார்கள்.

அந்த நபிமார்களை பார்த்து பைத்தியக்காரர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள், புலவர்கள் மற்றும் தெளிவில்லாதவர்கள், உலகம் பற்றிய அறிவில்லாதவர்கள் என்றெல்லாம் வசைபாடப்பட்டன. எனினும் தாம் சுமந்துவந்த ஏகத்துவ பிரச்சாரத்தில் எத்தகைய தடங்கலும் இல்லாது முழுமையாக தமது தூதுத்துவப் பணியை சமூகத்துக்கு அமானிதமாக ஒப்படைத்தார்கள்.

அந்த நபிமார்களுக்கு எதிராக நின்றவர்கள் பிர்அவுன் போன்ற முழு உலகையும் ஆட்சி செய்த மன்னர்கள், படைபலம் கொண்டவர்கள் எனப்பலரும் இருந்தார்கள். இறுதியில் அவர்களுடைய ஆட்சி அதிகாரங்களோ, வளங்களினால் எதனையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. படுதோல்வியுள்ளனர். 

அல்லாஹ்வின் ஆற்றலும் வல்லமையும் இவர்களிடம் இருந்த அனைத்து விதமான ஆற்றல்களையும் மிகைக்க கூடியதாக இருந்தன. இன்று அவர்கள் எல்லாம் முகவரி அற்றுப் போய்விட்டார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு கூட யாரும் இல்லாத அனாதைகளாக மாறிவிட்டார்கள்.

ஆனால் எந்த நிமிடமும் ஏதோ ஒரு நபியின் பெயர், அவரது பிரச்சாரத்தின் தாக்கம் அவரது பண்பியல் அவர்களது அழைப்புபணியின் நிதானம் சகிப்புத்தன்மை மக்கள் அவருக்கு செய்த அநியாயம் அட்டூழியம் அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி போன்றன நினைவுபடுத்த பட்டுக்கொண்டே இருக்கின்றன. இது அல்லாஹ்வின் ஸுன்னத்.

இறுதி தூதரான அருமை நபி ஸல்லல்லா{ஹ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக புலவர், ஆட்சி அதிகாரிகள், செல்வந்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் ஈற்றில் நபியவர்களே ஒரு தலைசிறந்த தலைவராக உலக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படட்டதுடன் அந்த நபியவர்களுக்கு எதிராகநின்ற அவர்களது மிக நெருக்கமான உறவு முறையை கொண்ட அபூஜஹ்ல் போன்றவர்கள் இன்று விலாசம் அற்றவர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த சமூகம் என்றும் தூயபணியில் ஈடுபடக்கூடியவர்கள் மீது,  வசைபாடல், கேவலப்படுத்த என்ற அந்த எதிர்விணையின் வரிசையில் தனது கைங்கரியத்தை செய்தே வந்திருக்கிறது.

எமது உயிரிலும் மேலான அருமை நபி அவர்களும் அவர்களது தோழர்களும் அதற்குப் பின்தோன்றிய இமாம்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். எனினும் அவர்களது உண்மையும் வாய்மையும் ஈற்றில்; வென்று சமூகத்தில் எழுச்சியுடனும் மறுமலர்ச்சி உடனும் இன்றும் உயிர்வாழ்கின்றது. எனினும் எதிரிகளை விலாசம் அற்றவர்களாக போய்விட்டார்கள். இந்த இஸ்லாமிய சமூகத்தால் என்றும் மறக்க இயலாத ஒரு பெரும் சொத்தான இமாம் புகாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களையோ, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களையோ விட்டுவைக்காத சமூகம், கொடுமைப்படுத்திய சமூகம் அதன் பார்வையில் இக்காலத்தவர்கள் எம்மாத்திரம்?

இதேபோன்று தான் என்றும் சமூகபணியில் சமயப்பணியில் என்றும் தம்மை அர்ப்பணித்து செயல்படுபவர்களுக்கு இந்தசமூகம் அப்படியான முத்திரைகளைதான் குத்தும், ஏனென்றால் அது இந்த சமூகத்தின் அனந்தரச் சொத்து. இறுதியில் இன் ஷா அல்லாஹ் உண்மையே வெல்லும்.



No comments

Powered by Blogger.