Header Ads



சஜித்தின் சர்வதேச விவகார மூத்த, ஆலோசகராக தயான் ஜயதிலக நியமனம்


சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் புகழ்பெற்ற ராஜதந்திர தூதருமான டாக்டர் தயான் ஜயதிலக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்  (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த ஆலோசகராக நேற்று (05.012021)நியமிக்கப்பட்டார்.

தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் சமூக அக்கரையின் முன்னோடியாக இருக்கும்  தயான் ஜயதிலக, ஜூன் 2007 முதல் அக்டோபர் 2009 வரை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையினல் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்தார்.  அவர் பல நாடுகளுக்கான உயர் ஸ்தானிகராக  ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்துள்ளார் மற்றும் ஒரு மூத்த அரசியல் வர்ணனையாளர்ரும் எழுத்தாளரும் ஆவார்.

ஒரு காலத்தில் லங்கா கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அவர் ஒரு முன்னணி கட்டுரையாளராகவும் இருந்துள்ளார்.  தயான் ஜயதிலக The Fall of Global, Socialism, Long War, Cold Peace, மற்றும் Fidel's Ethics of Violence ஆகியவற்றின் ஆசிரியரும் ஆவார்.

 முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களின் ஆலோசகராக இருந்த அவர் கொள்கை ஆய்வு நிறுவனத்தில் (1990-94) மோதல் ஆய்வுகள் இயக்குநராகவும், பின்னர் பிரேமதாச மையத்தின் நிர்வாக இயக்குநராகவும் (1994-2000) பணியாற்றினார்.  1989 ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் முதல் மற்றும் கடைசி இளைஞர் விவகார அமைச்சராகவும்  இருந்தார்.

No comments

Powered by Blogger.