Header Ads



எரிபொருள் விலை அதிகரிப்பை, தடுத்து நிறுத்தினார் ஜனாதிபதி


எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைத்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை அந்த யோசனைகளை நிகராகரித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்றைய தினம் -25- அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதன் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் இந்த விலை திருத்தம் மூலம் மக்களை சிரமத்திற்குள்ளாக்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முடியும் என்றால் எரிபொருளுக்காக அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57 டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 16 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளளார்.

No comments

Powered by Blogger.