Header Ads



தனது உடலை எரிக்கக் கூடாது என்பது வபாத்தானவரின் இறுதி ஆசை - உடலை என்ன செய்வது..? சட்ட ஆலோசனைக்கு காத்திருப்பு


குளியாப்பிட்டி மருத்துவமனையில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் உடலை தகனம் செய்வதற்கு உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியர்கள் உட்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது PCR முடிவுகள் கடந்த 16ஆம் திகதி கிடைத்துள்ளது. அன்றைய தினம் காலை குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து, உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்றியிருந்ததனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

எனினும் சடலத்தை ஏற்றுக் கொண்டதாக கையொப்பமிட மறுப்பு தெரிவித்த உறவினர்கள் சடலத்தை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் தனது தந்தை எனவும் வாழும் காலத்தில் அவர் நெருப்பிற்கு மிகவும் பயந்தவர் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது இறுதி ஆசையாக தன்னை தகனம் செய்ய கூடாது என தந்தை கூறியதாகவும் மத ரீதியாகவே இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார் என குடும்பத்தினர் வைத்தியர்களிடம் கூறியுள்ளனர்.

சுகாதார சட்டத்திட்டங்களுக்கு இணங்காமையினால் சடலத்திற்கு மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள சட்ட ஆலோசனை பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.