Header Ads



நந்தசேன கோட்டாபய ஆகவும் செயற்பட தயார் - ஹரீனுக்கு ஜனாதிபதி பதிலடி


அதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாத அரசியல் நடைமுறையை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்து அடையாளம் கண்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராமங்களுக்கு பேண்தகு அபிவிருத்தியை கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அவர்கள் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், எல் டீ டீ யீ பயங்கரவாதிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள். நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (09) காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற ஐந்தாவது 'கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சி இதுவாகும்.

விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக இருக்கும் நீர் பற்றாக்குறைக்கு தீர்வாக கொட்டபத்தமன குளத்தை புனரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். லாத்துகல கிராம வீதிகள் வழியாக நீர் குழாய்களை பதிக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.

ரம்பகன் ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து பதியதலாவைக்கு நீர் வழங்கவும், டெம்பிட்டிய, பூனாவளி, மல்லியத்தீவு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. யோதகண்டிய, கொட்டபத்தமன, லாத்துகல, ஹுலன்னுகே, ஹந்தபாதாகம உள்ளிட்ட குளங்களை விரைவில் புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

லாத்துகல கிராமத்தில் உர  களஞ்சிய தொகுதியொன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் , மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த மூன்று கணினிகளையும் லாத்துகல மற்றும் வித்யாலோகா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாராளுமன்ற உறுப்பினர்கள் டபிள்யூ.டி. வீரசிங்க, திலக் ராஜபக்ஷ, ஏ.எல்.எம் அதாவுல்லா, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பலர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.01.09

2 comments:

  1. பாராளுமன்றத்தில் கூட ஒரு உறுப்பினர் கதைக்க முடியாது

    ReplyDelete
  2. Athaivida intha news heading kevalamo kevalam.... Etho periya ulaga saathanaya sanathipathi padachchittaaru???

    ReplyDelete

Powered by Blogger.