Header Ads



புத்தாண்டு பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருடன் சந்திப்பு


புதிய ஆண்டின் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சவால்களை சரியாக புரிந்துகொண்டு, மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு நேர்மறையான அணுகுமுறையுடனும் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

பிறந்திருக்கும் 2021 புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

புதிய வருடத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் அரச சேவைக்கான உறுதி மொழி அளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி  ஜயசுந்தர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் அடிப்படையில் வினைத்திறனானதும் பயனுறுதிவாய்ந்ததுமான அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

நாடு தொழில்மை தலைமைத்துவத்தை பெற்றுள்ளது. கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வந்த "புதிய இயல்பாக்கம்" என்பதன் கீழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு அரச சேவையை ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்க்கின்றார் என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், 15 லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்களுக்கும், 600,000 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கும் எந்தவிதமான குறைப்புகளும் இல்லாமல் உரிய நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கிய உலகின் ஒரே அரசாங்கம் இலங்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரச ஊழியர்களைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளது. மக்களுக்காக அதிகபட்ச சேவையில் ஈடுபடுவது அனைத்து அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெலே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.01.01.



No comments

Powered by Blogger.