Header Ads



ரஞ்சனுக்கு எதிரான தீர்ப்பை விமர்சிக்கும்போது, அதற்கும் ஒரு வரையறை உள்ளது - அலி சப்ரி


சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது உரையாற்றிய நீதி அமைச்சர் அலி சப்ரி,

அரசமைப்பின் 89ஆம் பிரிவின் உப பிரிவில் ஜனாதிபதி அல்லது உறுப்பினர் ஒருவர் பின்வரும் தகைமையீனங்கள் அற்றவராக கருதப்படுவார் என்றார்.

அதாவது, 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பவர், உறுப்பினராக இருப்பதற்கு தகமையற்றவர் ஆவார். இதற்காக மேன்முறையீடு எதுவும் இல்லை.

மேலும், அரசியலமைப்பின் 105இன் உப உறுப்புரை 3இல், உயர் நீதிமன்றத்துக்கு அனைத்து தத்துவங்களும் காணப்படுகின்றன.

நீதிமன்றத்தை அவமதித்தால், அதற்கு தண்டிக்க முடியும். உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் எல்லையற்றது. அதை நாடாளுமன்றமும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அத்துடன், தீர்ப்பு அளிப்பது உயர்நீதிமன்றத்தின் தீர்மானமாகும். இது அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தீர்ப்பை விமர்சிக்கும் போது, அதற்கும் ஒரு வரையறை உள்ளது. எந்தவொரு பாரதுரமான விடயம் ஏற்பட்டாலும் நீதிமன்றத்தின் கன்னியத்தை பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரஞ்ஜனின் விவகாரம் சட்டத்துக்கு முரணானது அல்ல, அரசமைப்புக்கு உட்பட்டே இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.